சித்த வைத்திய அகராதி 11401 – 11450 மூலிகைச் சரக்குகள்
மிகுபத்தாவரை – பொன்னாவரைச்செடி
மிகுபத்திரிக் கொடி – காத்தொட்டிக்கொடி
மிகுபலவரிசி – கோதுமையரிசி
மிசிரிப்பருப்பு – மிசரிப்பருப்பு
மிதிபாகற்கொடி – பாகற்காய்கொடி
மிதுகயச்செடி – கையாந்தகரைச் செடி
மிதுக்கங்காய்க்கொடி – சுக்கங்காய்க் கொடி
மிரட்டினி – சுக்குப்பொடி
மிரியலகம் – மிளரு
மிரியார்கூந்தற்கொடி – சவுரிக்கொடி
மிரியாலிகம் – சித்தரத்தை
மிருக்காமியம் – வாயுவிளங்கம்
மிருகபத்திரிக் கொடி – வாற்சுண்டிக்கொடி
மிருகபாலிக்கிழங்கு – நாவிக்கிழங்கு
மிருஞ்சிமரம் – செம்முள் முருங்கைமரம்
மிருஞ்சீரக்கொடி – பிள்ளைதாட்சிக் கொடி
மிருதவள்ளிக் கிழங்கு – வள்ளிக்கிழங்கு
மிருதாரசிங்கி – சடாதார்சிங்கி
மிருதாளக்கொடி – தாமரைக்கொடி
மிருதியமரம் – வில்வமரம்
மிருதுபழம் – பேரிச்சம்பழம்
மிருதோற்பலக்கொடி – நீலோற்பலக்கொடி
மிருத்தாலகக் கோரை – உப்பங்கோரை
மிருத்தூவீகமரம் – மூங்கில்மரம்
மிருநாளகக்கொடி – தாமரைக்கொடி
மிலாங்கலிப்பூ – செங்காந்தட்பூ
மிலாதகம் – புனம்புளி
மிலேச்சகந்தப் பூடு – வெள்ளைப்பூடு
மிலேச்சகாமணி – மண்சாடிக்குண்டுமணி
மிலேச்சக்கள்ளி – பொத்தைக்கள்ளி
மிலேச்சலரிசி – கோதுமையரிசி
மில்லிச்சறுவி – புதரவண்ணான்
மிளகரணைச்செடி – முளகரணைச்செடி
மிளகாய்ச்செடி – முளகாய்ச்செடி
மிளகாய்நங்கை – வேப்பிலை நங்கை
மிளகு – முளகு
மிளகுக்காரணைச்செடி – முளகரணைச்செடி
மிளகுக்காய் – அழற்காய்
மிளகுசாரணை – முளகுசாரணைக் கொடி
மிளகுச்செடி – அழற்காய்ச்செடி
மிளகுதக்காளி – வெண்மிளகுதக்காளி
மிளகுநீர் – மூளகுரசம்
மிளிரைச்செடி – அரிவாள் மூக்குச்செடி
மிளிறுப்புல் – தாகம்புல்
மிறுங்கச்செடி – கையாந்தகரைச்செடி
மிறுங்காவிகச்செடி – பெருந்தேட்கொடுக்குச்செடி
மிறுசீரவேர் – விலாமிச்சை வேர்
மிறுதுஞ்சகாயம் – பெருங்காயம்
மிறுதுபச்சை – சமுத்திரப் பச்சை
மிறுதுபரிக்கோரை – பெருங்கோரைப்புல்




