HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 11451 - 11500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11451 – 11500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11451 – 11500 மூலிகைச் சரக்குகள்

மிறுதுபலாமரம் – நெல்லிமரம்
மிறுதுபலிகச்சீரகம் – பெருசீரகம்
மிறுதுபுட்பமரம் – வாகைமரம்
மிறுதுபூகக் குரும்பை – பெருங்குரும்பை
மிறுத்தாரிக்கற்றாழை – பெருங்கற்றாழை
மிறுத்தாலகமரம் – துவரைமரம்
மிறுத்தாவிக மரம் – பெருநாரத்தை மரம்
மிறுத்திகமரம் – குந்திரிமரம்
மிறுந்திகாமரம் – நெல்லிமரம்
மின்னிப்பயறு – காட்டுப்பயறு
மின்னொளியுப்பு – பூநீருப்பு
மீகைச்செடி – புலிதொடக்கிச் செடி
மீக்குகப்பருத்தி – பெரும் பருத்திச்செடி
மீக்குவமரம் – மருதுமரம்
மீச்சிதப்பாளை – வெள்ளாவிப் பாளை
மீதிகிச்செடி – கருஞ்சூரைச் செடி
மீதிராப்பட்டை – பெருலவங்கப்பட்டை
மீதிரைச்செடி – சூரஞ்செடி
மீதீந்தரத்தை – பேரரத்தை
மீதுந்துமரம் – நெல்லிமரம்
மீதுரைமூலம் – கஸ்தூரிமஞ்சள்
மீலனஞ்செடி – தொட்டாற்சிணுங்கிச் செடி
மீனாட்சிச்செடி – பொன்னாங்கண்ணிச் செடி
மீனாட்சிமைந்தன் – வீரவாஷாணம்
மீனார்ச்சிகச்செடி – மீன்கொல்லிச்செடி
மீனைமரம் – வசுவாசிமரம்
மீன்கொல்லிச்செடி – மச்சங்கொல்லிச் செடி
மீன்சிலாம்பு – கனைவாய்மீன் ஓடு (கடல் நுரை)
முகசோதிமரம் – எலுமிச்சை மரம்
முகந்திகாமரம் – முருங்கைமரம்
முகரிமரம் – தாழைமரம்
முகரேயக்கோவை – அப்பைக்கோவை
முகிழ்விரியாக்கத்திரி – கத்திரிப்பிஞ்சு
முகிளாகாக்கடலை – பொறிகடலை, சிறுகடலை
முகினிமரம் – புளியமரம்
முகுடப்பூண்டு – கோபுரப்பூண்டு
முக்கடுகு – சுக்கு, மிளகு, திப்பிலி
முக்கட்பிரான்செடி – சிவதுளசிச் செடி
முக்கண்ணன்காய் – தேங்காய்
முக்கண்ணன்பூ – தேங்காய்ப்பூ
முக்கண்ணிளையோன் – இளநீர்
முக்கண்பால் – தேங்காய்ப்பால்
முக்கரவேளை – முட்காவேளை
முக்கீரச்செடி – தைவயலிச்செடி
முக்குளிக்காரை – சதக்காரை
முக்குளிக்கீரை – பிண்ணாக்குக் கீரை
முக்குளிச்செடி – கோழிமுழையான்
முக்குறட்டைச் செடி – பூனைமுட்குறட்டை
முக்கூட்டுநெய் – மூன்று கூட்டு நெய்
முக்கோதலமரம் – தோதகத்திமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments