சித்த வைத்திய அகராதி 10451 – 10500 மூலிகைச் சரக்குகள்
பெருமராசிதச்செடி – வெள்ளைக் கொழுஞ்சிச் செடி
பெருமருந்துக் கொடி – தலைசுருளிக் கொடி
பெருமலர்க்கொன்றை – செழுமலர்க் கொன்றைமரம்
பெருமுட்டைச் செடி – பீநாறிச்சங்கஞ் செடி
பெருமுண்டினி மரம் – திருவாத்தி மரம்
பெருமுள்ளிச்செடி – காட்டுமுள்ளிச் செடி
பெருமுள்ளிலவமரம் – பேயிலவ மரம்
பெருமுன்னைமரம் – மலைமுன்னை மரம்
பெருமூங்கில் மரம் – மலைமூங்கில் மரம்
பெருமூசிகிமரம் – தேக்குமரம்
பெரும்பசளைக்கீரை – செம்பசளைக் கீரை
பெரும்பயறு – மொச்சைப்பயறு
பெரும்பருத்திச் செடி – லண்டன் பருத்திச் செடி
பெரும்பனம் பூ – கொய்யாத பூ
பெரும்பன்னாடை – நெய்யாத ஆடை
பெரும்பாண்டக்கொடி – பூசிணிக்கொடி
பெரும்பிரமி – மலைப்பிரமிச் செடி
பெரும்பீழைச் செடி – பெருபூம்ளைச் செடி
பெரும்புடற்கொடி – பேய்ப்புடற்கொடி
பெரும்புள்ளடி – சூதப் புள்ளடிச்செடி
பெரும்பூகிக்காய் – தேங்காய்
பெரும்பூசணிக்காய் – வெள்ளைப் பூசணிக்காய்
பெரும்பூதால மரம் – கல்லால மரம்
பெரும்பூளைச்செடி – கண்பூளைச்செடி
பெரும்பூனிதச்சுரை – பெருஞ்சுரைக் கொடி
பெரும்பூனைக்காலி – பூனைக்காஞ்சொரிச் செடி
பெருலவங்கப் பட்டை – லவங்கப் பட்டை
பெருலாகிகப்புடல் – நெடும் புடற்கொடி
பெருவலாகக்கற்றாழை – மருட்கற்றாழை
பெருவள்ளிக் கிழங்கு – ஆள்வள்ளிக் கிழங்கு
பெருவாகைமரம் – வாகைமரம்
பெருவாலமரம் – விழுதாலமரம்
பெருவிளாமரம் – விளாமரம்
பெருவிளிச்செடி – நரிவிளிச்செடி
பெருவீடுகொள்ளு – கொள்ளுச்செடி
பெருவீளிமரம் – விருசமரம்
பெருவெங்காயம் – யானை வெங்காயப்பூண்டு
பெருவேம்பு – மலைவேம்புமரம்
பெல்லேடோனாச் செடி – சீனத்துச்செடி
பெல்லௌணச்செடி – நாயுருவிச்செடி
பென்னைவிருட்சம் – பூதவிருட்சம்
பேதகிக்காரம் – வெங்காரம்
பேதனா – பேதானா
பேதாதிகமரம் – காட்டிலுப்பை மரம்
பேதாரிக்குறண்டிவிரை – பாற்குறண்டிவிரை
பேதி – அன்னபேதி
பேதிகாச்செடி – காட்டுக்கறி வேப்பிலைச்செடி
பேதிகாரிக்கொடி – பேய்க்குமிட்டிக் கொடி
பேதிகாலிகம் – சிவதைவேர்
பேதிக்கிழங்கு – ரேவல் சின்னிக்கிழங்கு




