HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 10501 - 10550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10501 – 10550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10501 – 10550 மூலிகைச் சரக்குகள்

பேதிதயச்செடி – காட்டுக்கத்திரிச் செடி
பேதியாகுமூலிகைகள் – சிவதை, பாக்கு, நேர்வாளக்கொட்டை, கடுக்காய், நிலவாகை, சூரத்து நிலவாகை, முடக்கத்தான்கொடி.
பேதியாவரை – சூரத்தாவரை
பேதியாவிகக் கொட்டை – நேர்வாளக் கொட்டை
பேதியைக்கட்டுமூலிகை – வசம்பு
பேதிரஞ்சனமரம் – தணக்குமரம்
பேதிவாளம் – நேர்வாளம்
பேதுகச்செடி – காட்டுசீரகச்செடி
பேப்பாட்சிச்செடி – பேய்ப்பாட்சிச் செடி
பேமாசிகச்செடி – பேய்க்கடலைச் செடி
பேயகத்தி – கசப்பகத்திமரம்
பேயகிக்காளான் – பேய்க்காளான்
பேயத்திமரம் – காட்டத்திமரம்
பேயம்மான் பச்சரிசி – சின்னம்மான் பச்சரிசிச்செடி
பேயவரை – காட்டவரை
பேயனுள்ளிச்செடி – காட்டுள்ளிச்செடி
பேயன்வாழி – மொந்தைவாழை
பேயால்மரம் – கல்லால்மரம்
பேயாவிரை – சுடலையாவரைச் செடி
பேயிலவமரம் – முள்ளிலவமரம்
பேயிலீசக்கள்ளி – நாகதாளிக் கள்ளி
பேயிலுப்பைச்செடி – காட்டிலுப்பைச் செடி
பேயிவரகு – காட்டுவரகு, கூவரகு
பேயுள்ளி – காட்டுள்ளி
பேயூசிதக்கொடி – பேய்ப்புடல்
பேயூமத்தைச் செடி – மருளுமத்செடி
பேயூவிதக் கற்றாழை – நாய்க்கற்றாழை
பேயெலுமிச்சை – காட்டெலுமிச்சை மரம்
பேயெள்ளு – காட்டெள்ளு
பேயோடாடிச்செடி – சிவகரந்தைச் செடி
பேய்க்கடலை – கசப்புக் கடலைச்செடி
பேய்க்கடுக்காய் – சிறுகடுக்காய்
பேய்க்கண்டகமரம் – பேய்த்தேற்றா மரம்
பேய்க்கத்திரி – காட்டுக் கத்திரிச்செடி
பேய்க்கரிப்பான் செடி – காட்டுக்கரிப்பான் செடி
பேய்க்கரும்பு – காட்டுக்கரும்புத் தட்டை
பேய்க்கற்றாழை – நாய்க் கற்றாழை
பேய்க்காலிக் கொடி – பூனைக்காஞ்சொரிக் கொடி
பேய்க்காளான் – மஞ்சட் காளான்
பேய்க்குமிட்டிக் கொடி – பேயக் கொம்மட்டிக்கொடி
பேய்க்கொள்ளு – கடுபுடுகாணம்
பேய்ச்சிங்கிக்கொடி – பேய் முசுட்டைக் கொடி
பேய்ச்சீந்திற்கொடி – கருஞ்சீந்திற்கொடி
பேய்ச்சீபிதச்செடி – நிலம்புரண்டிச் செடி
பேய்ச்சீரகம் – காட்டுச்சீரகம்
பேய்ச்சீலியச்செடி – பேய்க்கடலைச் செடி
பேய்ச்சுண்டை – நாய்ச்சுண்டைக் செடி
பேய்ச்சுரபிக் காளான் – பேய்க்காளான்
பேய்ச்சுரைக்கொடி – கசப்புக்சுரைக் கொடி
பேய்ச்சேதிகம் – பேய்க்கற்றாழை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments