கடுவெளிச் சித்தர் – ஆனந்தக்
களிப்பு 26 – 30 of 35 பாடல்கள்
களிப்பு 26 – 30 of 35 பாடல்கள்
26. வைதோரைக் கூடவை யாதே: – இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும்
பொய்யாதே
பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே.
விளக்கவுரை :
27. சிவமன்றி வேறே வேண்டாதே – யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத்
தூண்டாதே
தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே – நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே.
விளக்கவுரை :
28. பாம்பினைப் பற்றியாட் டாதே – உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட்
டாதே
டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே – உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே.
விளக்கவுரை :
29. போற்றுஞ் சடங்கை நண்ணாதே – உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே – பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே.
விளக்கவுரை :
30. கஞ்சாப் புகைபிடி யாதே – வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே – பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே.
விளக்கவுரை :




