Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 2971 - 3000 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2971 – 3000 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2971 – 3000 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

கொடுக்கும் படியாய்க் குருக்கவையு மென்றுரைத்தார்
அடுக்கநின்ற தேவர் அதுகேட்டுச் சீக்கிரமாய்
மறையோனையும் மாதுவையும் வந்தெடுத்துச் சாபமிட
இறையவரைப் பார்த்து ஏதுரைப் பான்மறையோன்
இப்போது இட்ட இச்சாப மானதுதான்
எப்போது நீங்கும் என்றேகேட் டான்மறையோன்
நீசக் குலமறுத்து நெடிய திருமாலும்
மாசில்லாத் தர்ம வையகத்தை யாளுதற்கு
அன்பு சேகரிக்க அங்குவரு வார்கண்டீர்
வம்பு மாறும்போது மாறுமுங்கள் சாபமென்றார்
உடனே மறையோனும் ஓவியமு ள்ளதென்று
தடமேலே நின்று தால மெனவளர்ந்தார்
வளர்ந்த அமிர்தமதை மக்களேழு பேர்களுக்கும்
பழமமிர்தக் காயோடு பலவகையுந் தானாண்டு
அமிர்தமதை நீங்கள் ஆக்கிரகந் தானடக்கிக்
குமிர்தமுட னீங்கள் குடித்திருங்கோ வென்றுசொல்லி
உங்களுக்குப் பாலமிர்தம் ஊறுமல்லா லித்தாலம்
எங்களுக்கு மித்தாலம் இசையாது கண்டீரோ
பாலருக்கு இந்தவரம் பரமயுகத் தோர்கொடுத்து
ஞாலமுள்ள காளி நாயகியைத் தானழைத்து

பத்திரத்தாள் பெற்றமக்கள்

பாலரையுங் காளி பண்பாக வாங்குகையில்
ஆலமுத முண்ட அச்சுதரு மேதுரைப்பார்
அடவு பதினெட்டும் அலங்கார வர்மமதும்
கடகரியின் தொழிலும் கந்துகத் தின்தொழிலும்
மாவேறுந் தொழிலும் வாள்வீசுந் தொழிலும்
பாவேறு பாட்டும் பழமறைநூ லானதுவும்
அடவு மேலான அதிகப்பல வித்தைகளும்
திடமு மிகவருத்தி சேனா பதியாக்கி
எல்லா விதத்தொழிலும் இசைவான ராகமதும்
நல்லா வருத்தி நாட்டமுட னேகொடுத்து

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments