HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 6601 - 6650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6601 – 6650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6601 – 6650 மூலிகைச் சரக்குகள்

சீதளப்பாசி – வேப்பம்பாசி
சீதயமரம் – கொடிமாதளை
சீதளம் போக்கிச்செடி – வெண்கொளுஞ்சிச்செடி
சீதனிச்செடி – பொன்னாங்கண்ணி
சீதனிநங்கை – வேப்பிலைநங்கைச்செடி
சீதாகரணிச்செடி – குங்குமச்செவ்வந்திச்செடி
சீதாகாரிப்பட்டை – வேம்பாடம்பட்டை
சீதாங்கபாஷாணம் – பன்னகபாஷாணம்
சீதாங்கிசப்பட்டை – முருங்கப்பட்டை
சீதாங்கிதமரம் – பாற்பட்டைமரம்
சீதாசெங்கழுநீர் – செங்கழுநீர்க்கொடி
சீதாதியரிசி – கோதுமையரிசி
சீதாப்பிரியச்செடி – விஷ்ணுகரந்தைச்செடி
சீதாயம் – சுடலை – மயானம்
சீதாரிக்கீரை – செம்புளிச்சக்கீரை
சீதாவிகப்பூ – செண்பகப்பூ
சீதாவிச்சாதம் – பாற்சாதம்
சீதாளமரம் – கூந்தற்பனைமரம்
சீதேவிச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
சீதைச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
சீத்தாதிம் – பிசின்
சீத்தாப்பழம் – சீத்தாக்கனி
சீத்தாமரம் – லெட்சுமிமரம், சீந்தமரம், பிராமரம்
சீந்திற்கொடி – அமுதவல்லிக்கொடி
சீந்தூகிமரம் – செம்பைமரம்
சீமுதைக்கொடி – கொடிமுந்திரி
சீமைக்கரி – நிலக்கரி
சீமைக்கற்றாழை – சீனக்கற்றாழை
சீமைக்காலிகச்செடி – ஆலீவுச்செடி
சீமைக்கொடுக்காப்புளி மரம் – கொறுக்கைப்புளிமரம்
சீமைச்சுண்ணாம்பு – கட்டிச்சுண்ணாம்பு
சீமைச்சேம்பு – களற்சேம்பு
சீமைச்சோபிதச்செடி -ஊதளைச்செடி
சீமைத்தக்காளிப்பழம் – சீனத்தக்காளிப்பழம்
சீமைத்துத்திச்செடி – வெண்துத்திச்செடி
சீமைப்பிச்சிச்செடி – சீனவெண்பிச்சிச்செடி
சீமைமணத்தக்காளி – பெருந்தக்காளிச்செடி
சீமைமல்லிகைச்செடி – சிமிக்கிமல்லிகைச்செடி
சீமைமோச்செடி – காலசிகச்செடி
சீமையகத்தி – பேயகத்திச்செடி
கீமையாதிதச்செடி – குவாசியாச்செடி
சீமையாதளைச்செடி – சிவப்பாதளைச்செடி
சீமையாதனச்செடி – இபிகாக்குச்செடி
சீமையாத்திப்பழம் – தசையத்திப்பழம்
சீமையாமணக்கு – சீனத்தாமணக்கு
சீமையாமியச்செடி – கலம்பாச்செடி
சீமையிலந்தைப்பழம் – ஆப்பிள்பழம்
சீமைவெள்ளரிக்கொடி – பெருவெள்ளரிக்கொடி
சீயக்காய்ச்செடி – சிகைக்காய்ச்செடி
சீரகக்கோணி – வசம்பு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments