சித்த வைத்திய அகராதி 9801 – 9850 மூலிகைச் சரக்குகள்
பிடரியஞ்சுமரம் – கருவேம்புமரம்
பிடியல் – சேலை, துகில்
பிட்டகிப்பாளை – ஆடுதின்னாப்பாளை
பிணராமரம் – கோங்குமரம்
பிண்டஷபுஷ்பம் – செவ்வந்தி புட்பம்
பிண்டிதக்காரை – மருக் காரைச்செடி
பிண்டிதக்கொடி – தாளிக்கொடி
பிண்டிதக்கொழுந்து – மருக் கொழுந்துச்செடி
பிண்டிதமரம் – அசோகுமரம்
பிண்டித்துருவ மரம் – குங்கிலிய மரம்
பிண்டிவாளம் – குந்திரிக்கம்
பிண்டீரகச்செடி – மாதளைச்செடி
பிண்ணாக்குக்கீரை – பண்ணைக்கீரை
பிதரண்டச்செடி – ஊமத்தைச்செடி
பிதிராக்குரும்பை – பெருங்குரும்பை
பிதிராதகச்செடி – சுண்டைக்காய்ச் செடி
பிதுர்க்கத்திரி – முள்ளிக்கத்திரி
பித்தசாந்திச் செடி – பொன்னாங்கண்ணிச்செடி
பித்திகை – சிறுசெண்பகச் செடி
பித்திராமரம் – வன்னிமரம்
பிப்பலமரம் – அரசமரம்
பிப்பலாசவறுகு – யானையறுகு
பிப்பிலிநெருஞ்சி – பெருநெருஞ்சி
பிப்பிலியத்திக்கொடி – நெருஞ்சிக் கொடி
பிரகஸ்தகிமரம் – காட்டுமாமரம்
பிரகாசப்புல் – சோதிப்புல்
பிரங்காமலக்காய் – நெல்லிக்காய்
பிரசாரமர் – வேங்கைமரம்
பிரசீனமரம் – சிற்றுடைமரம்
பிரண்டைக்கொடி – சதுரப்பிரண்டைக் கொடி
பிரபாகிரிடப்பூச்சி – மின்மினிப்பூச்சி
பிரப்பங்கிழங்கு – சூரற்கிழங்கு
பிரப்பங்கோரை – தடிப்புக்கோரை
பிரமதண்டு – குருக்குச்செடி
பிரமதந்திக் கொடி – சிறுகட்டுக்கொடி
பிரமதரு – கற்பகத்தரு
பிரமதாலயச்செடி – நாகமல்லிகைச் செடி
பிரமபத்திரம் – புகையிலை
பிரமமூலி – பிரமிச்செடி
பிரமமேதமரம் – கானற்பலாமரம்
பிரமவுப்பு – கரியுப்பு
பிரமவேர் – மாக்கொடி
பிரமவேர்ப்பொடி – சுக்குப்பொடி
பிரமiவரியச்செடி – செந்நாயுருவிச்செடி
பிரமிச்செடி – நீலப்பிரமிச்செடி
பிரமிதியக்கொடி – சிறு செருப்படைக்கொடி
பிரம்புக்கொடி – அடம்புக்கொடி
பிரவொட்டிச்செடி – பசையொட்டிச்செடி
பிரளாதீதமரம் – கருந்தேக்குமரம்
பிராசீனப்பாளை – பங்கம்பாளை




