சித்த வைத்திய அகராதி 11851 – 11900 மூலிகைச் சரக்குகள்
மோராடவேர் – கரும்புவேர்
மோதிச்செடி – வேர்க்கடலைச்செடி
மோர்ச்சாதம் – உறைமோர்ச் சாதம்
மோனவயிரி – அருணாக்கயறு
மௌடிதசாலைச்செடி – கரிசாலைச்செடி
மௌட்டியக்கொடி – ஊசலாங்கொடி
மௌட்டியப்பாக்கு – பச்சைப்பாக்கு
மௌட்டேயச்செடி – வெண்டிச்செடி
மௌண்டிதப்பயறு – பாசிப்பயறு
மௌத்காசக்கிழங்கு – வெண்ணாவிக்கிழங்கு
மௌத்திகபாலைக்கொடி – விஷபாலைக்கொடி
மௌலிமுடி – தலைமுடி
மௌவறிக்கொடி – வனமல்லிகைக் கொடி
மௌவாலிப்பூண்டு – குதிரைவாலிப்பூண்டு
யங்கூரா – அதிவிடையம்
யசுவபரிச்செடி – அலரிச்செடி
யஞ்சலிக்கொடி – வரட்சுண்டிக்கொடி
யதவுமரம் – அத்திமரம்
யவாசிகச்செடி – சிறுகாஞ்சொரிச்செடி
யாவனிகம் – ஓமம்
யாகவுப்பு – பூர்ணாதியுப்பு
யாதினிக்குலவி – சாராயம்
யாதுகவரிசி – வாலுளுவையரிசி
யாலமரம் – ஆலமரம்
யாளசியவுப்பு – வெடியுப்பு
யாவநாளம் – வெண்சோளம்
யானைக்கற்றாழை – கருங்கற்றாழை
யானைக்காலடிப்பூண்டு – வட்டவாரிப்பூண்டு
யானைக்கால்மூலி – யானையடி மூலி
யானைக்கால்வணங்கி – பெரு நெருஞ்சிற்கொடி
யானைக்காற்சுவடி – அத்திக்காற்சுவடி
யானைக்குன்றிமணி – பெங்குண்டுமணி
யானைக்கொம்பன்திவிடையம் – அத்திக்கொம்பன்திவிடையம்
யானைக்கொம்பன் வாழை – மொந்தன்வாழைமரம்
யானைத்தடிச்சற் கிழங்கு – புளிநரளைக்கிழங்கு
யானைத்திப்பிலி – பெருந்திப்பிலி
யானைத்தெல்லு – பெருந்தெல்லுக் கொடி
யானைநெருஞ்சிற்கொடி – பெருநெருஞ்சிற் செடி
யானைப்பிச்சான்கிழங்கு – புளிநரளைக்கிழங்கு
யானைப்பீஷன்மரம் – குளோப்புக் கொன்னைமரம்
யானைப்புளியமரம் – பொந்தம்புளியமரம்
யானைமயக்கிச்செடி – குஞ்சாமயக்கிச்செடி
யானையறுகு – பெரிய அறுகு
யானைவணங்கிச்செடி – தேட்கொடுக்குச்செடி
யிந்திரியவல்லிக்கொடி – முடக்கத்தான்கொடி
யிலவமரம் – உலகுமரம்
யில்லவமரம் – தேற்றான்மரம்
யீசுரமூலிக்கொடி – பெருமருந்துக் கொடி
யீச்சமரம் – பேரீச்சமரம்
யீஞ்சுச்செடி – சிற்றீச்சஞ்செடி




