சித்த வைத்திய அகராதி 151 – 200 மூலிகைச் சரக்குகள்
அசிபகாந்தச்செடி – கருவீழிச்செடி
அசிபத்திரத்தட்டை – கரும்புத்தட்டை
அசீவம் – மரணம்
அசுணப்பூடு – வெள்ளைப்பூண்டு
அசுதகிமரம் – கருவேம்புமரம்
அசுவகந்தி – அமுக்கிராச்செடி
அசுவக்கிழங்கு – அமுக்கிராக்கிழங்கு
அசுவசட்டிரக்கொடி – நெருஞ்சில்
அசுவசாம்பிரப்பூ – கருப்பு மந்தாரைப்பூ
அசுவச்செடி – அமுக்கிராச்செடி
அசுவத்தமரம் – அரசமரம்
அசுவத்தாதிக்காய் – கருப்பு வழுதலங்காய்
அசுவாபரிச்செடி – அரளிச்செடி
அசுவாபாணிதமரம் – கருமருதோன்றிமரம்
அசுவாமணக்குச்செடி – சிறு பூளை
அசூசம் – சூதகம், அசுத்தம்
அசோகமரம் – அசோகுமரம்
அசோகாதிதச்செடி – சிவதுளசி
அசோகுமரம் – கோபிகமரம்
அசோடகத்திமரம் – சிவப்பகத்திமரம், செவ்வகத்தி மரம்
அசோணப்பழம் – வாழைப்பழம்
அசோணமரம் – வாழைமரம்
அசோண்டிக்கொடி – குறட்டைக்கொடி
அசோண்டிப்பழம் – குறட்டை
அசோதகிச்செடி – அவுரிச்செடி
அச்சகச்செடி – நீர்முள்ளிச்செடி
அச்சஞ்செடி – குட்டியச்சஞ்செடி
அச்சதாப்பிரியமரம் – கருவாழை
அச்சத்திரிச்செடி – கத்திரிச்செடி
அச்சபாப்புல் – நாணற்புல்
அச்சபாணிகச்செடி – சிவப்பம்மான் பச்சரிசிச்செடி
அச்சமப்புல் – முசுறுப்புல்
அச்சமரம் – மாவச்சமரம்
அச்சமாயிதக்கொடி – சிவப்புக் கழற்சிக்கொடி
அச்சம்பபோளச்செடி – சிவப்பு அடுக்கலரிச்செடி
அச்சாணிமரம் – கருவேம்புமரம்
அச்சாணிமூலிக்கொடி – வேலிப்பருத்திக்கொடி
அச்சினிமாதம் – எட்டாம்மாதம்
அச்சுரக்கொடி – நெருஞ்சிக்கொடி
அச்சுரை – உடம்பு, சரிரம்
அச்சுவத்தமரம் – அரசுமரம்
அச்சுவாதீதச்செடி – சிவப்புக்காரளிச்செடி
அஞ்சலிக்கொடி – வரற்சுண்டி
அஞ்சலிப்பாளைச்செடி – ஆடுதின்னாப்பாளைச்செடி
அஞ்சனகுமாரிச்செடி – சிமிட்டிச்செடி
அஞ்சனக்கல் – கருநிமிளை
அஞ்சனத்திரவியம் – ஐங்கோலத்தைலம்
அஞ்சனபாஷாணம் – வான்சோதி பாஷாணம்
அஞ்சனபோளம் – கரியபோளம்
அஞ்சனவேர் – அவுரிவேர்




