சித்த வைத்திய அகராதி 201 – 250 மூலிகைச் சரக்குகள்
அஞ்சனிப்புல் – நாணற்புல்
அஞ்சிகம் – கண், நேத்திரம்
அஞ்சினிமாதம் – ஐந்தாம்மாதம்
அஞ்சீரமரம் – அத்திமரம்
அஞ்சுரவாணிநீறு – பூநீறு
அஞ்சுருவாணிப்பூட்டு – துருசுச் செம்பு
அஞ்சுருவாணி மருந்து – துருசு
அஞ்சுருவாணியுப்பு – கல்லுப்பு, பூநீருப்பு
அஞ்சுரவாணிமூலம் – மூப்பு
அஞ்சூகக்கீரை – சிவப்பு அரைக்கீரை
அஞ்செவிக்கொடி – வரட்சுண்டிக்கொடி
அடகம் – வசம்பு , பேர்சொல்லான்
அடங்கரோகிணி – கடுகுரோகிணி
அடங்காவாரிதி – மூத்ரம் , அமுரி
அடப்பங்கொடி – அடம்புக்கொடி
அடப்பதாதிச்செடி – சிவப்புக்கூத்தன்குதம்பைச் செடி
அடப்பிமரம் – கடம்பமரம்
அடப்பிமாதிகச்செடி – சிவப்புக்காசித்தும்பைச் செடி
அடப்பைமரம் – வாதாங்கொட்டை மரம்
அடவிகச்செல்வம் – கஸ்தூரி மஞ்சள், அழகுமஞ்சள்
அடவிகம்மம் – சாம்பல்
அடவிமஞ்சள் – மரமஞ்சள்
அடவிமூர்க்கிச்செடி – சிவப்புக் கிலுகிலுப்பைச்செடி
அடவிமேற் புல்லுருவி – கள்ளிமேற்புல்லுருவி
அடவிமைச்செடி – கருங்கரிப்பான் செடி
அடாசனிச்செடி – புளியாரை
அடித்திகச்செடி – அமுக்கிராச்செடி
அடிநீர் – சுத்தகங்கை நீர்
அடிம்புருகவேர் – சிவதைவேர்
அடுக்கலரிச்செடி – அடுக்கரளிச்செடி
அடுக்கிளநீர்த்தென்னை – ஆயிரங்காட்சித்தென்னை
அடுக்கிறைபுஷ்பம் – வெண்டாமரைப்புஷ்பம்
அடுக்குச் செம்பரத்தை – குங்கும செம்பரத்தைச்செடி
அடுக்நந்தியாவட்டைச் செடி – அகில மேதகச்செடி
அடுக்குவாழை – பனை வாழை மரம்
அடுக்கூமத்தைச்செடி – காட்டூமத்தைச்செடி
அடைவிகச்சோலம் – கஸ்தூரிமஞ்சள்
அட்சதை – மங்கலவரிசி
அட்சரப்புல் – பீனசப்புல்
அட்சரப்போளம் – கரியபோளம்
அட்டகணிச்செடி – ஆடா தோடைச்செடி
அட்டகத்தாதிக்கிழங்கு – சிவப்புச்சருக்கரை வள்ளிக்கிழங்கு
அட்டகம் – வசம்பு, பேர்சொல்லாதது
அட்டகராசிச் செடி – சிறுசிமிட்டிச் செடி
அட்டகிராஞ்சினி – மணற்சீனி
அட்டக்காய் – சாதிக்காய்
அட்டதாதிக மரம் – சிறு கொன்றைமரம்
அட்டதிசைச் செடி – எருக்கிலைச்செடி
அட்டதீரசம் – அரபொடி
அட்டப்பிரமிச்செடி – பெரும்பிரமிச்செடி




