Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 7681 - 7710 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7681 – 7710 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7681 – 7710 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வெந்தோசந் தீர்ந்துதென்று வெள்ளிக் கயிலையிலே
ஒருவிடத்தி லெக்கியத்தை ஊட்டிக் கனலெழுப்பித்
திருநடன மாடுமென்று செப்பினா ரொப்புடனே
அப்படியே நல்லதென்று அரனு முமையாளும்
முப்படியே மாலினிக்கு ஒன்பதாம் பேறெனவும்
வேதனுக்கோ ராயிரம் பிறவி யாச்சுதென்றும்
மாது உமைக்கு வளர்பிறவி ஏழெனவும்
திதுவுக்கோர் பத்தாம் செய்யப் பிறவியென்றும்
சதுர்மறைக் கேழெனவும் சாஸ்திரத்துக் கோர்நான்கும்
வானவர்கோன் றனக்கு வளர்பிறவி மூன்றெனவும்
தானவர்க் கேழெனவும் சரசுபதிக் காயிரமாம்
தொண்டர் தமக்கு சூல்பிறவி யொன்றெனவும்
அண்டர்கள் மெய்க்க அரனடன மாடலுற்றார்

திருநடன உலா

நாதன் முறையார்க்கு நற்பிறவி யொன்றுபத்தாம்
வேதன் றனக்குப்பிறவி ஆயிரமாம் – வெண்டரள
மாதுக்கு மாயிரமாம் மாதுமைக் கோரேழாம்
சீதுக்குப் பத்தெனவே செப்பு

இந்திரற்கு மூன்றெனவும் இறையவருக் கேழெனவும்
சந்திரற் கோரேழாம் சாற்று – நன்றியுள்ள
மறையதுக்கு மோரேழாம் மானமுள்ள தொண்டருக்கு
இறப்பிறப்பில் லாப்பேறென் றியம்பு

என்றிவகை ளெல்லா மிப்படியே வந்துதென்று
ஒன்றியுள்ள சித்தாதி ஓதினான் – பண்டையுள்ள
தாவடத்தை மேவிடத்திக் கோவிடத்தி லோமிடத்தி
நாவிடத்திப் பூண்னதோ

தன்னாலே முளைத்த சற்கணையின் றண்வாங்கிப்
பின்னாலே யோர்கணைப் பீறி – பின்னாளே
பீறுங் கணையதினால் பெரும்புவியெல் லாந்தோன்றிச்
சீறுங் கலிவயதால் சென்றுதோ

வானத்தளவில் வளர்ந்த கம்பத் தண்ணருளால்

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments