HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5096 - 5100 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5096 – 5100 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5096 – 5100 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5096. காட்டையிலே எழுத்தாணி தானுமப்பா கருவான வரிசிதனை பிடித்துக்கொண்டு
வாட்டமுடன் நிற்கின்ற
வண்மைதன்னை வையகத்தில் கண்டவர்கள் மயங்குவார்கள்
கேட்டமுடன்
அரிசிதனைக்கொட்டிக்காட்ட திறமுடனே கேட்பவர்களாமேயானால்
நீட்டமுடன் கொட்டியதைக்
காட்டுவாய்நீ நிஜமென்ற ஜாலமதை மெய்யென்பாரே
விளக்கவுரை :
5097. பாரேதான் லோகமெல்லாம்
பிர்மித்தேங்கி பாலகனே யுனைக்கண்டு வஞ்சலிப்பார்
சீரேதா னுந்தமக்கு
சிறப்புமுண்டு சிற்பரனைப் போலாக எண்ணியல்லோ
நேரேதான் திரிகாலபூசையோடு
நீதியுடன் உபசரனை மெத்தவுண்டு
வீரேதான் சதாகாலம்
உனைப்பணிந்து விருப்பமுடன் எப்போதும் துதிப்பார்தாமே
விளக்கவுரை :

[ads-post]
5098. துதியான யின்னமொரு ஜாலங்கேளு
துப்புரவாய் கோழியென்ற முட்டைதானும்
பதியான வர்ணமதுமேலேயேற்றி
பாங்குடனே காரமென்ற காடிதன்னில் 
விதியான மூன்றுநாளூரப்போடு
விருப்பமுடன் மூன்றுநாள் கழிந்தபின்பு
மதிபோன்ற பூனீராம்
கிளாசுபாத்திரம் மதிப்புடனே போட்டடைக்க விதிதான்கேளே
விளக்கவுரை :
5099. கேளப்பா சின்னவாய்
கொண்டபாத்திரம் கெடியான பாத்திரமாம் வாயினுள்ளே
பாளப்பா போகாமல் முட்டைதன்னை
பான்மையுடன் கையினாற்றள்ள முட்டை
வீளப்பஆ தோள்போலே
யுள்ளேபோகும் விருப்பமுடன் மறுபடியும் பாண்டத்துள்ளே
நாளப்பா போகாமல்
ஜலத்தைவிட்டு நாயகனே யொருநாழி பொருத்திடாயே  
விளக்கவுரை :
5100. பொறுத்துமே ஜலமதனை
யிறுத்துப்போடு பொன்னவனே எப்போதும் போலேயப்பா
நிறுத்துமே முட்டையது
கல்லுபோலாம் நீமகனே பாண்டத்துள் உருட்டிக்காட்டு
திருத்தமுடன் முட்டையது
மகிமைவித்தை தீர்க்கமுடன் யாரேனுங் காணமாட்டார்
பொருத்தமுள்ள முட்டையென்ற
வித்தைதானும் பொங்கமுடன் மாணாக்கள்
பிழைக்கத்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments