சித்த வைத்திய அகராதி 2151 – 2200 மூலிகைச் சரக்குகள்
உமாதகியச்கொடி – குன்றிமணி
உமாதகியரிசி – கருங்குரவை
உமாதசிச்செடி – சணற்செடி
உமாதாதகிச்செடி – மஞ்சட்செவ்வந்திச்செடி
உமியல் – வசம்பு
உமியல்தாரிக்கொடி – கருநெய்தற்கொடி
உமியல்நீர் – அமுதநீர்
உமிரிநீர் – அமிர்தநீர்
உமிழ்நீர் – வாய்நீர்
உமிழ்நேசழகமரம் – இரும்புளிமரம்
உமுரிச்செடி – உமரிச்செடி
உம்பராகம் – ஆத்தழமேற்புல்லுருவி
உம்பல்மரம் – குமிழ்மரம்
உம்பளிக்கொடி – ஆகாயவெள்ளரிக்கொடி
உயத்திகபாஷாணம் – வெள்ளைப்பாஷாணம்
உயந்திசச்செடி – ஆள்வாடைதட்டிச்செடி
உயர்வுக்கொடி – குன்றுமணி
உயர்வேகிமதம் – கல்மதம்
உயவைக்கொடி – காக்கணத்தி
உயவைப்பூலா – கருப்புப்பூலா
உயிர்காப்பாற்றுமூலி – சஞ்சீவி
உயிர்த்தவமரம் – இனிப்புமாமரம்
உயிர்விமரம் – வேங்கைமரம்
உயிர்வீகமரம் – இரத்தவேங்கை
உய்யக்கொண்டான்மரம் – கொய்யாமரம்
உரககன்னிச்செடி – நாகமல்லிகை
உரகக்கொடி – மல்லிகைக்கொடி
உரகச்சீரகம் – காட்டுச்சீரகம்
உரகமல்லிக்கொடி – நாகமல்லிகை
உரகவல்லிக்கொடி – வெற்றிலை
உரப்பங்காயம் – பெருங்காயம்
உரப்பவங்கச்செடி – உள்ளொட்டிச்செடி
உரம் – வெள்ளுரம்
உரலாகைச்செடி – கருவீழி
உரலாமணக்குச்செடி – கடலாமணக்குச்செடி
உரிணிச்செடி – கொத்தமல்லி
உரிதாகமரம் – ஊடசில்மரம்
உரித்திரமஞ்சள் – மரமஞ்சள்
உரிமைச்சடாமரம் – ஊழலாத்தி
உருக்குக்காரம் – வெங்காரம்
உருக்குமித்திரச்செடி – வெள்ளையாமணக்குச்செடி
உருசைதரும்பூ – கஞ்சியுப்பு
உருடகக்கிழங்கு – கருநாவி
உருண்டைகாப்பிக்கொட்டை – உருண்டைகோப்பிகொட்டை
உருண்டைப்பிரண்டை – கோப்பிரண்டை
உருத்திரசடைச்செடி – திருநீற்றுப்பச்சைச்செடி
உருத்திரம் – மஞ்சள்
உருத்திரவுப்பு – வெடியுப்பு
உருத்திரiவரிக்கடலை – கருப்புக் கடலை
உருத்திராட்சம் – உருத்திராக்கம்




