HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5076 - 5080 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5076 – 5080 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5076 – 5080 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5076. அவிழ்த்துமே சபையார்முன்
வராகந்தன்னை யங்ஙனவே விட்டுவிடு பிரமிப்பார்கள்
புவிதனிலே இந்தவித்தை
ஜாலவித்தை புகழான விந்தையிது காணப்போகா
துவிதமுள்ள ஜாலமேதந்திரஜாலம்
துப்புரவாய் காண்பதுவே மரிதேயாகும்
குவிதமுள்ள டோலினது
வித்தைதன்னை குவலயத்தில் காணார்கள் மட்டிமாடே
விளக்கவுரை :
5077. மாடான வித்தையிது மகிமையப்பா
மகிதலத்தில் எவராலும் கூறப்போமோ
கூடான கூடுவித்தை
பாயும்வித்தை கூறினேன் வையகத்தில் நீதவித்தை
தாடாண்மை கொண்டதொரு
வராகவித்தை தாரணியில் யாரேனுஞ் செய்வாருண்டோ
பாடான தந்திரமாம்
ஜாலப்போக்கு பாலித்தேன் மாணாக்கள் பிழைக்கத்தானே
விளக்கவுரை :

[ads-post]
5078. தானான இன்னமொரு கருமானங்கேள்
தன்மையுள்ள வாஞ்சநேயா பிடித்துவந்து
கோனான குருதனையே
நினைத்துக்கொண்டு கொற்றவனே சிற்றாமணக்கு வித்துதானும்
தேனான வித்தையதை
யெடுத்துக்கொண்டு தேற்றமுடன் ஆசனத்தின்வழியதாக
மானான வயறுநிறை
கொள்ளுமட்டும் மகத்தான கொட்டைதனை பொதிந்திடாயே
விளக்கவுரை :
5079. பொதியவே குழிவெட்டி
வாஞ்சநேயர் பொங்கமுடன் தான்போட்டு மண்ணைமூடி
விதியான மார்க்கமது
போலேயப்பா வித்தகனே நாள்தோறும் ஜலத்தைவிட்டு
பதியான நாள்கடந்து
பார்த்தாயானால் பாலகனே செடியாகும் பண்பாய்க்கேளு
துதியுடனே காயதுவும்
காய்த்தபின்பு தூய்மையுடன் வித்துதனை யெடுத்திடாயே
விளக்கவுரை :
5080. எடுத்துமே தயிலமது வாட்டியப்பா எழிலான தயிலமதை பதனம்பண்ணு  
அடுத்துமே அழிஞ்சியின்தன்
தயிலங்கூட்டி வப்பனே பரணிதனில் அடைத்துநீதான்
விடுத்துமே விடுதியொன்று
மச்சியொன்று விரிவான மாளியது வீட்டுக்குள்ளே
தொடுத்ததொரு விளக்கதனில்
நீபமேற்றி தோற்றமடா வுன்ரூபம் கிரங்குமாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments