HomeUncategorizedஇடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 76 - 80 of 130 பாடல்கள்

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 76 – 80 of 130 பாடல்கள்


இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 76 – 80 of 130
பாடல்கள்
76. அன்னையைப் போலெவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முத்தியடை புல்லறிவே. 
விளக்கவுரை :
சித்தத்தொடு கிளத்தல்
கண்ணிகள்
77. அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீ பறபர
          மானந்தங் கண்டோமென்று தும்பீ பற
மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபறமலை
          மேலேறிக் கொண்டோமென்று தும்பீபற.
விளக்கவுரை :
           
78. அல்லல்வலை இல்லையென்றே தும்பீபறநிறை
          ஆணவங்க ளற்றோமென்றே தும்பீபற
தொல்லைவினை நீங்கிற்றென்றே தும்பீபறபரஞ்
          சோதியைக் கண்டோமெனத் தும்பீபற.    
விளக்கவுரை :
79. ஐம்பொறி அடங்கினவே தும்பீபறநிறை
          அருவே பொருளாமெனத் தும்பீபற
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபறஒரு
          தெய்வீகங் கண்டோமென்றே தும்பீபற.   
விளக்கவுரை :
80. மூவாசை விட்டோமென்றே தும்பீபறபர
          முத்திநிலை சித்தியென்றே தும்பீபற
தேவாசை வைத்தோமென்று தும்பீபறஇந்த
          செகத்தை யொழித்தோமென்று தும்பீபற.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments