சித்த வைத்திய அகராதி 5001 – 5050 மூலிகைச் சரக்குகள்
கொம்பரக்கு – பட்டையரக்கு
கொம்பரிப்பிசின் – இலவம்பிசின்
கொம்பன்பாகல் – நீட்டப்பாகல்
கொம்புகப்பாகல் – கொம்பன்பாகற்கொடி
கொம்புத்தேன் – நறுந்தேன்
கொம்புப்பயறு – பாசிப்பயறு
கொம்புப்புடல் – குட்டைப்புடல்
கொம்மட்டிக்காய் – பேய்க்குமட்டிக்காய்
கொம்மட்டிக்கீரை – குமிட்டிக்கீரை
கொம்மட்டிக்கொடி – பேய்க்கொம்மட்டிக்கொடி
கொட்டிச்சீரம் – கருஞ்சீரகம்
கொம்மட்டிமரம் – கசப்புமாதளை மரம்
கொம்மட்டிமரிகச்செடி – நிலவேம்புச்செடி
கொம்மட்டி மாதளை – கொடிமாதளை மரம்
கொம்மாதிமரம் – நெட்டிலிங்கு மரம்
கொம்மைமரம் – கொம்மட்டி மாதளைமரம்
கொய்கைமேனிமரம் – ஆயிரங்காட்சித் தென்னைமரம்
கொய்யாமரம் – செங்கொய்யாமரம்
கொய்யின்கீரை – அரைக்கீரை
கொய்னா – சீனச்சரக்கு
கொய்னானிகச்செடி – பண்ணைக்கீரைச் செடி
கொட்டைக்கொடி – குறட்டைக் கொடி
கொரட்டைப்பழம் – குறட்டைப்பழம்
கொரண்டிச்செடி – முட்குறண்டிச்செடி
கொரிகாமரம் – கொடுக்காப் புலி
கொரிகைப்பூண்டு – எழுத்தாணிப்பூண்டு
கொரிக்கியச்செடிடி – பாற்கொழுஞ்சிச்செடி
கொரித்தலைவேம்பு – நிலவேம்பு
கொருடக்கொடி – கொல்லன்கோவைச்செடி
கொல்லன் குதம்பைச்செடி – பலாமிச்செடி
கொல்லன்கூதகப்பூண்டு – பல்லிப்பூண்டு
கொல்லன்கொடி – கொல்லன்கோவைக்கொடி
கொல்லன்கோவிகச்செடி – பின்துடரிச்செடி
கொல்லன் கோவை – ஆகாயக்கருடக்கோவை
கொல்லனபகைப்பாஷாணம் – அஞ்சனபாஷாணம்
கொல்லாகிகச்செடி – செம்முள்ளிச்செடி
கொல்லிகச்செடி – ஆற்றுமுள்ளங்கிச்செடி
கொல்லைக்கீரை – குப்பைக்கீரை
கொல்லைப்பல்லிச்செடி – நின்றிடந்தீஞ்சான் செடி
கொழிஞ்சிநாரத்தைமரம் – இனிப்புநாரத்தைமரம்
கொழுஞ்சினிச் செடி – நாய்வேளைச்செடி
கொழிதமேனிச்செடி – குப்பைமேனிச்செடி
கொழிதாகிதச்செடி – முன்துடரிச்செடி
கொழுக்கட்டைத்தேக்கு – மோதகத்தேக்கு
கொழுங்காதிகமரம் – பீநாறிமரம்
கொழுங்கிகாச்செடி – மல்லிகைச்செடி
கொழுங்கிரிக்கொடி – பீர்க்கங்கொடி
கொழுஞ்சிச்செடி – கொள்ளுக்காய்வேளைச் செடி
கொழுஞ்சிச்சோளம்- முத்துச்சோளம்
கொழுஞ்சிநாரத்தை – கிச்சிலிநாரத்தை




