சித்த வைத்திய அகராதி 5351 – 5400 மூலிகைச் சரக்குகள்
சடப்பால் – முலைப்பால்
சடம் – வயிறு
சடலநீர் – அமுரிநீர்
சடலநேமிமரம் – முட்கொன்னைமரம்
சடாதகமரம் – அரிநெல்லிமரம்
சடாதகிகப்புல் – முத்தக்காசு
சடாதரிக்கொடி – சவுரிக்கொடி
சடாதரிமரம் – சவுக்குமரம்
சடாதலிகச்செடி – மோகணத்திச்செடி
சடாபலமரம் – கூந்தற்பனைமரம்
சடாமாஞ்சில் – சடைமாஞ்சில்
சடாமுடி – சடைமுடி
சடிதிவுச்சோலம் – கச்சோலம்
சடிரைச்செடி – வெண்தகரைச்செடி
சடிலமாஞ்சில் – சடாமாஞ்சில்
சடிலாகியப்பூண்டு – மூக்கொற்றிப்பூண்டு
சடினம் – வசம்பு
சடைக்கந்தகச்செடி – கஞ்சாச்செடி
சடைக்கந்தம் – கெந்தகம்
சடைக்காந்தாரிக்கொடி – மூக்கரைச்சாரணைக்கொடி
சடைக்குறண்டி – சமாலிக்குறண்டி
சடைக்கைச்செடி – இலைக்கள்ளிச்செடி
சடைக்கொடி – நெட்டிக்கொடி
சடைக்கோங்குமரம் – மஞ்சட்கோங்குமரம்
சடைச்சிகாச்செடி – மீன்கொல்லிச்செடி
கடைச்சிகிக்கொடி – நீர்ச்சுண்டிக்கொடி
கடைச்சிகிரிச்செடி – மிளகாய்ச்செடி
சடைச்சிச்செடி – வாய்க்காற்சடைச்சிச்செடி
சடைச்சிப்பூடு – கீரிப்பூடு
சடைத்தும்வை – முடித்தும்பைச்செடி
சடைநவ்வல்மரம் – நரிநவ்வல்மரம்
சடைநாங்கில் – பெருநாங்கில்மரம்
சடைப்பாசிக்கொடி – நீர்ப்பாசிக்கொடி
சடைப்பூம்பாதிரிமரம் – பாதிரிமரம்
சடைமாஞ்சக்கொடி – மிளகுசாரணைக்கொடி
சடைமாஞ்சில் – சடாமாஞ்சில்
சடைமுடிமரம் – கொன்றைமரம்
சடையொட்டிப்புல் – தலையொட்டிப்புல்
சடைவன்னிமரம் – உருத்திராக்கமரம்
சட்டால்மரம் – வில்வமரம்
சட்டிகக்கால்மரம் – முடவாட்டுக்கால்மரம்
சட்டிகாக்கொடி – தாமரைக்கொடி
சட்டிகிப்புல் – பாய்க்கோரைப்புல்
சட்டிரவச்செடி – தைவேளைச்செடி
சட்பராசிப்புல் – அறுகம்புல்
சணகக்கீரை – புளியாரைக்கீரை
சணம்புச்செடி – சணப்புச்செடி
சணம்பூகிகச்செடி – முட்சுண்டைச்செடி
சணற்செடி – சணம்புச்செடி
சணற்சேதிகச்செடி – முத்திருக்கன்செவிச்செடி




