சித்த வைத்திய அகராதி 3701 – 3750 மூலிகைச் சரக்குகள்
காஷ்மீரப்பூ – புங்குமப்பூ
காஞ்சனமரம் – புங்குமரம்
காஞ்சனமாலிதச்செடி – கொத்தவரைச்செடி
காஞ்சனம் – தங்கம்
காஞ்சனி – மஞ்சள்
காஞ்சனிப்புங்கு – கொடிப்புங்குமரம்
காஞ்சனிமரம் – செண்பகமரம்
காஞ்சாச்செடி – கஞ்சாச்செடி
காஞ்சிகப்பூடு – கொல்லைப்பல்லிப்பூடு
காஞ்சிகாமரம் – எட்டிமரம்
காஞ்சிகிமரம் – காஞ்சிரைமரம்
காஞ்சிரைக்கொட்டை – எட்டிக்கொட்டை
காஞ்சிரைமரம் – எட்டிமரம்
காஞ்சிரைமேற்புல்லுருவி – எட்டிமேற்புல்லுருவி
காஞ்சுகமரம் – முருங்கைமரம்
காஞ்சொறிச்செடி – செந்தொட்டிச்செடி
காடகச்செடி – காட்டுமுள்ளிச்செடி
காடிநீர் – புளித்தநீர்
காடுகிப்பூண்டு – சிற்றெழுத்தாணிப்பூண்டு
காடைக்கண்ணி யரிசி – கவந்தலைக்கண்ணியரிசி
காடைக்கழுத்தி – முன்னைமரம்
காடைப்புடம் – ஒரெருப்புடம்
காட்டகத்திமரம் – காட்டாத்தி
காட்டகிமரம் – கொன்னைமரம்
காட்டணமரம் – பெருங்குமிழ்மரம்
காட்டதாதிக்கொடி – கொடிமுன்னை
காட்டத்திமரம் – பேயத்திமரம்
காட்டரளிச்செடி – மலையலரிச்செடி
காட்டலரி – ஆத்தரளி
காட்டாலாகிரிமரம் – கொடிமாதளைமரம்
காட்டவரைக்கொடி – பேயவரை
காட்டாகுமுல்லைச்செடி – கொடிமுல்லைச்செடி
காட்டாதளைச்செடி – காட்டாமணக்குச்செடி
காட்டாதாரிகம் – கொடியத்தி
காட்டாத்திமரம் – ஆத்திமரம்
காட்டாமணக்கு – காட்டாதளை
காட்டாமணி – உத்தாமணி
காட்டாரைக்கொடி – கல்லாரை
காட்டாலமரம் – பேயாலமரம்
காட்டால்மரம் – பெருந்தும்பைச்செடி
காட்டிஞ்சி – சிற்றிஞ்சி
காட்டிஞ்சிமூலம் – காரணைவேர்
காட்டிஞ்சிவேர் – மூக்கரைச்சாரணைவேர்
காட்டிருப்பவட்செடி – ஒரிசாரிகைச்செடி
காட்டிலந்தை – நரியிலந்தைச்செடி
காட்டிலந்தைப்பழம் – சிற்றிலந்தைப்பழம்
காட்டிலவவிக்கொடி – கொட்டையவரைக் கொடி
காட்டிலுப்பைச்செடி – பேயிலுப்பைச்செடி
காட்டீரகமரம் – கொட்டைமுந்திரிமரம்
காட்டீருள்ளி – நரிவெங்காயம்




