சித்த வைத்திய அகராதி 12051 – 12100 மூலிகைச் சரக்குகள்
வசந்ததரு – மாமரம்
வசம்பு – வசரக்கொடி
வசம்புகாக் கொடி – மலைவள்ளிக் கொடி
வசலிகாச்செடி – மல்லிகைச்செடி
வசலைக்கீரை – பசலைக்கீரை
வசனக்கொடி – தாமரைக்கொடி
வசிகரப்பூடு – வெள்ளைப்பூடு
வசிகரமருவு – மருவுச்செடி
வசிகரிச்செடி – காரௌளுச்செடி
வசிதம் – மிளகு
வசிரத்திப்பிலி – யானைத்திப்பிலி
வசிவாசிப்பூ – மீனைப்பூ
வசினிமரம் – வன்னிமரம்
வசுவாசிமரம் – மீனைமரம்
வச்சகம் – மலைமல்லிகைக்கொடி
வச்சதாகச்செடி – கருஞ்கொள்ளுச்செடி
வச்சினிக்கொம்பு – மஞ்சட்கொம்பு
வச்சினிச்சேம்பு – களற்சேம்புச் செடி
வச்சாதனிக்கொடி – சீந்திற்கொடி
வச்சிதண்ணீர் – இரத்தம் – உதிரம்
வச்சிரசலக்கிழங்கு – கோரைக்கிழங்கு
வச்சிரசீதக்கொடி – பேய்ச்சீந்திற்கொடி
வச்சிரநிம்பமரம் – கருவேம்பு மரம்
வச்சிரவீசகமரம் – கொடிப்புங்கு மரம்
வச்சிரபீசக்காய் – கழற்சிக்காய்
வச்சிரப்பால் – எருக்கம்பால், பிரண்டைச்சார்
வச்சிரப்பீலிகம் – வச்சிரம்
வச்சிரமூலி – பிரண்டை, எருக்கு
வச்சிரமேதிப்பால் – எருமைப்பால்
வச்சிரம் – சதுரக்கள்ளி, பிரண்டை எருக்குவச்சிரப்பீலீகம்
வச்சிரவல்லிக்கொடி – பிரண்டைக்கொடி
வச்சிரவிருக்கம் – புல்லுருவி
வச்சிரவேங்கை – மணிமுத்துவேங்கைமரம்
வச்சிராங்கதப்புஷ்பம் – எள்ளுப்பூ
வச்சிராங்கம் – சதுரக்கள்ளி
வச்சிராங்கிக் கொடி – மூக்குத்திக்காய்க் கொடி
வச்சிராங்கிப்பால – சதுரக்கள்ளிப்பால்
வச்சிராஞ்சிக்கொடி – பிரண்டைக்கொடி
வச்சிராயிலை – பிறவொட்டியிலை
வஞ்சிக்கொடி – குளவஞ்சிக்கொடி
வஞ்சிப்பால் – முலைப்பால்
வஞ்சிமரம் – சுவேதவஞ்சிமரம்
வஞ்சிமாலிக்கொடி – கொத்தான்க்கொடி
வஞ்சரிமரம் – விருசுமரம்
வஞ்சிராச்செடி – கொடுவேலிச்செடி
வஞ்சளமரம் – வேங்கைமரம்
வஞ்சூலிகச்செடி – சூரத்தாவரைச் செடி
வடகாதியமரம் – ஆலமரம்
வடகீலியச்செடி – சூரஞ்செடி
வடங்கன் – வெங்காயம்




