சித்த வைத்திய அகராதி 12101 – 12150 மூலிகைச் சரக்குகள்
வடம் – இணங்கன், வெடியுப்பு
வடுகன் – வயிரவன்
வட்டக்கிலுகிலுப்பை – மஞ்சட்கிலுகிலுப்பைச் செடி
வட்டக்கிளாச்செடி – களாச்செடி
வட்டக்குளம்படி – கழுதைக்குளம்படிக் கொடி
வட்டக்குளிகச்செடி – மேகநிறச்செவ்வந்திக் கொடி
வட்டத்தகரை – தகரைச்செடி
வட்டத்தாமரை – செந்தாமரை
வட்டதிருப்பிச்செடி -ஆடுதின்னாப்பாபளை
வட்டத்துத்தி – சிறுதுத்தி
வட்டநரிமிரட்டி – வட்டக்கிலுகிலுப்பை
வட்டவழுக்கை மரம் – வழுக்கைமரம்
வட்டுமுள்ளிக்கீரை – கறிமுள்ளிக்கீரை
வண்டர் – துருசு
வண்டலக்கீரை – வள்ளைக்கீரை
வண்டாழைமரம் – இலைத்தாழை மரம்
வண்டிகிக் கொட்டை – முந்திரிக்கொட்டை
வண்டிரச்செடி – பேராமுட்டிச்செடி
வண்டிரம் – வாகைமேற்புல்லூரி
வண்டில் -வெங்காரம்
வண்டுகொல்லிப்பாளை – ஆடுதின்னாப்பாளைக் கொடி
வண்டுகொல்லிமரம் – செண்பகமரம்
வண்டுணாமரம் – வேங்கைமரம்
வண்டுணிக்கொடி – தாமரைக்கொடி
வண்டுளச்செடி – நந்தியாவட்டைச் செடி
வண்ணானவுரி – நிலவுரிச்செடி
வண்ணானழுக்கு – சூதகம்
வதனாகப்பூச்செடி – வாடாமல்லிகைச் செடி
வதுவடிமரம் – பாலைமரம்
வதுவைக்கண்ணிச்செடி – பெரியாணங்கைச் செடி
வத்தகமரம் – வெட்பாலைமரம்
வத்தகிமுள்ளிச்செடி – காட்டுமுள்ளிச்செடி
வத்தமச்செடி – ஆமணக்குச்செடி
வத்திநயினி – மயக்கம்
வத்திரதாறுச்செடி – செம்புளிச்சைச் செடி
வத்திரபஞ்சகச்செடி – சிவகரந்தைச் செடி
வத்திரோணமரம் – பெருமரம்
வஸ்து – மதுபானம்
வஸ்துநீர் – சூதகநீர்
வந்துலப்பாளைக் கொடி – பங்கம்பாளைக் கொடி
வந்தூலச்செடி – வெள்ளுமத்தைச் செடி
வயகாண்டகச்செடி – கவிழ்தும்பைச்செடி
வயக்கேதனச்செடி – கானல்மிளகாய்ச்செடி
வயதரக்காய் – கடுக்காய்
வயந்தியச்செடி – குத்துப்பிடாரிச்செடி
வயலிகாப்பூண்டு – கோனியப்பூண்டு
வயலிக்கிழங்கு – முள்ளங்கிக் கிழங்கு
வயல்நெட்டிச்செடி – நீர்நெட்டிச்செடி
வயல்வேளைச்செடி – வயலிச்செடி
வயவாசச்செடி – கொழுஞ்சிசெடி




