HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 12001 - 12050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12001 – 12050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12001 – 12050 மூலிகைச் சரக்குகள்

லாசகப்பயறு – பனிப்பயறு
லாடன்பருத்தி – இலண்டன் பருத்திச்செடி
லிக்கோகொட்டை – நேர்வாளக்கொட்டை
லிங்கச்சூதம் – லிங்கரசம்
லிங்கபாஷாணம் – வன்னிகற்பாஷாணம்
லீப்பாசிதச்செடி – வெள்ளருக்குச் செடி
லீப்பாவிரை – காக்கைகொல்லிவிரை
லுக்காவிரை – பேதானாவிரை
லுக்கோசூரை – கருஞ்சூரைசெடி
லூச்சிகாப்புல் – சோனைப்புல்
லூச்சிப்பிசின்மரம் – குங்கிலிய மரம்
லெட்சுமிமரம் – சித்தாமரம்
லெட்சுமிக்கொடி – தாளிக்கொடி
லெந்துப்பு – கல்லுப்பு
லெப்பு – கங்கையுப்பு
லேச்சுகாச் செடி – மணத்தக்காளிச் செடி
லேவுந்துக்கோரை – உப்பங்கோரை
லைலித்தும்பை – பெருந்தும்பைச்செடி
லைலுப்பாலை – வெப்பாலைமரம்
லொக்கிகாச்செடி – நாயுருவிசெடி
லொத்தான்கொடி – முடக்கொத்தான்கொடி
லோசினம் – கண், நேத்திரம்
லோத்திரக் கிழங்கு – கொட்டிக்கிழங்கு
லோலேகக்கீரை – சாணாக்கீரை
லேளகிகமரம் – சந்தனமரம்
வுசத்திராமரம் – வாகைமரம்
வகாரவுப்பு – கல்லுப்பு, கஞ்சியுப்பு, குடத்துநீருப்பு
வகுட்பச்சை – சமுத்திராப்பச்சை
வகுண்டச்செடி – கவிழ்தும்பைச்செடி
வகுண்டாசிகச்செடி – மலைப்புகையிலைச்செடி
வகுண்டிகைக்கோரை – கஞ்சாங்கோரை
வகுண்டிகாவரிசி – வாலுளுவையரிசி
வகுத்தாலப்பாசி – கொடிப்பாசி
வகுழம்பூ – மகிழம்பூமரம்
வகுளப்பச்சை – சமுத்திராப்பச்சை
வகுளிச்சாரம் – எவாச்சாரம்
வகுளிமாமரம் – மலைமாமரம்
வக்கணத்திமரம் – மாகணத்திமரம்
வக்கிரபுட்பம் – முருங்கைப்பூ
வங்கச்செடி – இண்டஞ்செடி
வங்கணப்பட்டை – செங்கத தாரிப்பட்டை
லவங்கம் – வெள்ளீயம்
வங்கம்நீத்திமரம் – மலை முருங்கை மரம்
வங்கராஜன் – ஈயம்
வங்கனிப்பட்டை – செங் கத்தாரிப்பட்டை
வங்காரவல்லைக்கொடி – வல்லைக்கொடி
வங்கினி – மை – திலகம் – பொட்ட
வங்குசநீர் – கூகைநீர்
வசகச்செடி – கொடுவேலிச்செடி
வசநாவிக்கிழங்கு – நஞ்சுக்கிழங்கு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments