HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 9201 - 9250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9201 – 9250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9201 – 9250 மூலிகைச் சரக்குகள்

நோஞ்சவக்கொட்டை – மல்லாக்கொட்டை
நோதளைச்செடி – பிராமுட்டிச்செடி
நோதாங்குசப்புல் – கர்ப்பைப் புல்
நோபித்திரினி – கேடு, வியாதி
நோம்புவாலிக்கொடி – குதிரைவாலிக் கொடி
நோம்புவிரலிச்செடி – மஞ்சட்கொத்துச்செடி
நோம்பூகயச்செடி – நிலப்பூசணிச்செடி
நோம்பூரிகக்கொடி – சருக்கரைப் பூசணிக்கொடி
நோலாகிதச் செடி – திருநீற்றுப் பச்சை
நோலிகச் செடி – நின்றிடந்தீஞ்சான் செடி
நோவுபோக்கிவிரை – நேர்வாளவிரை
நோறுசமரம் – நீரத்திமரம்
நோன்புப்பாஷாணம் – கெளரி பாஷாணம்
நௌகத்தாரிப்பட்டை – செங்கத்தாரி
நௌகாசரைமரம் – காஞ்சிரை மரம்
நௌகாசினிக்கீரை – சாணாக்கீரை
நௌகாகிதச்செடி – சூரஞ்செடி
நௌகுமரம் – சிறுசூழ்ந்துமரம்
நௌபத்தோமம் – குரோசாணியோமம்
நௌபந்திகை மரம் – மோகனத்தி மரம்
நௌவுகாபத்திரி – சாதிபத்திரி
நௌவுகிக்செடி – சூரத்துநிலவாகை
நௌவுகுமரம் – நவுகுமரம்
பகரமரம் – கொக்குமந்தாரை மரம்
பகராசிகமரம் – சூலிமரம்
பகர்பாளைச்செடி – பங்கம்பாளைச் செடி
பகர்விலிக்கொடி – நெய்தற்கொடி
பகவிருக்கஞ்செடி – நிலக்கடம்புச்செடி
பகவூகச் செடி – பாற்குறட்டைச் செடி
பகன்றைச் செடி – கிலுகிலுப்பைச்செடி
பகாலிச்செடி – சிவதுளசிச்செடி
பங்கசக்கொடி – தாமரைக்கொடி
பங்கசாசிகம் – குளிர்தாமரை
பங்கசாதமக்கொடி – பங்கசக்கொடி
பங்கணிப்பாளைக் கொடி – பங்கம்பாளைக் கொடி
பங்கதாவிகச்செடி – கவிழ்தும்பைச் செடி
பங்கம்பாளை – ஆடுதீண்டாப்பாளை
பங்கரம் – அதிவிடையம்
பங்கிச்செடி – கஞ்சாச்செடி
பங்கிவிதை – கஞ்சாவிதை
பங்கூரம் – மரமஞ்சள்
பங்கேசக்கொடி – தாமரைக்கொடி
பசமருத்திரம் – பங்கூரம்
பசரிகக்கொடி – பூனைக்காஞ்சொரிக் கொடி
பசிதகினி – சோறு – சாதம்
பசுங்கொடி – அறுகுக்கொடி
பசுங்கொண்டி மரம் – வெள்வேலாமரம்
பசுண்டிரம் – சீரகம்
பசுநாகமரம் – வில்வமரம்
பசுமுன்னைமரம் – முன்னைமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments