சித்த வைத்திய அகராதி 901 – 950 மூலிகைச் சரக்குகள்
அலத்தகரை – பெத்தணத்தி
அலத்துச்செடி – உமுரிச்செடி
அலத்துருஞ்சூலி – பெருஞ்சூலி
அலந்தற்பட்டை – செங்கத்தாரிப்பட்டை
அலந்தாரி – பெரியஎழுத்தாணி
அலப்பம் – அங்கப்பிச்சு
அலப்புகாச்செடி – பெரிய சிவப்பம்மான் பச்சரிசிச்செடி
அலரிச்செடி – அரளிச்செடி
அலாபதவேர் – இலாமிச்சைவேர்
அலாபாதிகச்செடி – பெரியம்மான் பச்சரிசிச்செடி கிழங்கு
அலாபுக்கொடி – சுரைக்கொடி
அலாபொருகக்காய் – பெருங் கடுக்காய்
அலாரிதச்செடி – அலரிச்செடி
அலாருகமரம் – பெருங்களாமரம்
அலிகமரம் – நறுவிலி மரம்
அலிப்பானுப்பு – வெடியுப்பு
அலியன்காய் – செங்கடுக்காய்
அலியன்குறிஞ்சிச்செடி – பெருஞ்செந்தொட்டிச்செடி
அலுவீகமரம் – வில்வமரம்
அலுவேகிகமரம் – பெருங்காய், நாரிமரம்
அலோசிக்கொடி – பசளைக்கொடி
அலோதகச்செடி – பெருங்கொத்தவரைச்செடி
அலோமிச்செடி – பொற்றலைக் கரிப்பான்செடி
அலோமுகக்காளான் – பெருங்காளான்
அல்லாசிக்கொடி – பெருங்கொடி முந்திரி
அல்லாமாகிகம் – இஞ்சி கொடுக்குச்செடி
அல்லாரிக்கொடி – ஆம்பற்கொடி
அல்லாருகக்கொடி – பெருந்தாளி
அல்லிகக்கொடி – பெண்ணரசு
அல்லிக்கொடி – ஆம்பற்கொடி
அல்லிக்கோணி – பேய்க்கற்றாழை
அல்லியக்கிழங்கு – கொட்டிக் கிழங்கு
அல்லுகமரம் – பெருங்கொய்யா
அல்லூரமரம் – வில்வமரம்
அல்லைக்கொடி – வள்ளைக்கொடி
அவகதவாய் – கீழ்காய்நெல்லி
அவக்காட்சிதச்செடி – பெருஞ் சிமிட்டிச்செடி
அவத்தச்செடி – நாய்வேளை
அவந்தாதிகச்செடி – பெருஞ் சிலும்பான்செடி
அவந்திகண்ணிக்கிழங்கு – வெருகன்கிழங்கு
அவந்திகைக்கொடி – மஞ்சளவரை
அவந்திநவ்வல் – திப்பிலிநவ்வல்
அவந்திநாதச்செடி – பெருஞ்சின்னிச்செடி
அவயகவேர் – இலாமிச்சைவேர்
அவரகமரம் – பெருமூங்கில்மரம்
அவரிச்செடி – அவுரிச்செடி
அவருகச்செடி – பெரும்பிரமி
அவரைக்கொடி – முதிரைக்கொடி
அவரோகிகமரம் – கல்லால்மமரம்
அவலரக்கு – அரக்கு




