HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 851 - 900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 851 – 900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 851 – 900 மூலிகைச் சரக்குகள்

அருதாவேசனி – பெருங்காளான்  
அருத்திரமஞ்சள் – மரமஞ்சள்  
அருத்திரமாசுப்பழம் – பம்பளிமாசுப்பழம்   
அருத்துருமமரம் – வெள்வேலா  
அருத்துரோகிதச்சசெடி – பரங்கியாமணக்குச்செடி   
அருநெல்லி – அரிநெல்லி    
அருநேரளிச்செடி – பிடங்குநாரி  
அருப்பச்செடி – தொடரிச்செடி  
அருப்பலத்தரிசி – புல்லரிசி   
அருப்பலமரம் – அனிச்சைமரம்  
அருமருந்துக்கொடி – பெருமருந்துக்கொடி    
அருளகஞ்செடி – எருக்கஞ்செடி 
அருளருசிமரம் – வெட்பாலை  
அருளரோசிகச்செடி – புல்லூரி    
அருளவமரம் – பெருமரம்    
அருளாசியிலை – வேப்பிலை  
அருளாதிமரம் – குடசப்பாலை  
அருளாதோதியச்செடி – புளிப்பிலந்தைச்செடி  
அருளாபுக்கொடி – சாரணை  
அருளாபோகிகச்செடி – புளிப்புக்கொடி, மாதுளைச்செடி
அருளுறுதிமரம் – வேப்பமரம்        
அருளோதியக்கொடி – புளிப்புக்கொடி முந்திரி 
அருள்மரம் – இரும்பகமரம்  
அருள்விருட்சம் – பஞ்சதரு       
அரேசகானச்செடி – கரணை
அரேசானகமரம் – புளிப்புக்கொழுமீச்சைமரம்
அரேசிகமரம் – வாழைமரம்
அரேசோனிதமரம் – புளிப்புநவ்வல்
அரேணுகப்பூ – வால்மிளகு
அரேணுகப்போருகமரம் – புளிப்புமாதுளை மரம்
அரேணுகம் – வால்மிளகு
அரைக்சாசப்புல் – பூனைப்புல்
அரைக்கீரை – அறுகீரை
அரோசகாரி – தூம்புரவாலி
அரோட்டுமா – கிழங்கின்மா
அலகம் – ஆனைத்திப்பிலி
அலகாபிதக்கொடி – புளிப்புமுந்திரிக்கொடி
அலகுசோலிப்புல் – அறுகம்புல்
அலகுப்பீஷன் – பூனைப்பீஷன்
அலகுமரம் – மகிழமரம்
அலகுமாரகப்புல் – பூனைப்புல்
அலகைக்கொம்மட்டிக்கொடி – பேய்க்கும்மட்டிக்கொடி
அலகைப்புடல் – பேய்ப்புடல்
அலக்கைநெல்லி – கீழ்காய்நெல்லி
அலங்கமரம் – தாழைமரம்
அலங்காரச்செம்பரத்தை – பெருஞ்செம்பரத்தைச்செடி
அலங்காரம் – வெடிகாரம்
அலங்கைச்செடி – துளசிச்செடி
அலசத்துவம் – சோம்பு
அலத்தகச்செடி – செம்பருத்தி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments