குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல்.
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
Translation:
‘We’ve gained his grace, boots nought what
graceless acts we do’,
graceless acts we do’,
So deem not sages who the changeless vision
view.
view.
Explanation:
Those whose judgement is firm will not do
what is disagreeable (to the sovereign) saying (within themselves) “We are
esteemed by the king”.
what is disagreeable (to the sovereign) saying (within themselves) “We are
esteemed by the king”.
கலைஞர் உரை:
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.
[ads-post]
மு.வ உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
மணக்குடவர் உரை:
யாம் அரசனாலே
கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற
தெளிவுடையார். இஃது
அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.
கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற
தெளிவுடையார். இஃது
அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
கொளப்பட்டேம் என்று எண்ணிக்
கொள்ளாத செய்யார் – அரசனால்
யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற
காட்சியவர் – நிலைபெற்ற
அறிவினையுடையார். (கொள்ளாதன
செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே
கருதி அஞ்சியொழுகுவாரைத்
‘துளக்கு அற்ற காட்சியவர்‘ என்றார்.)