குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்வி.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
Translation:
The
man who store of learning gains,
man who store of learning gains,
In
one, through seven worlds, bliss attains.
one, through seven worlds, bliss attains.
Explanation:
The
learning, which a man has acquired in one birth, will yield him pleasure during
seven births.
learning, which a man has acquired in one birth, will yield him pleasure during
seven births.
கலைஞர் உரை:
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.
[ads-post]
மு.வ உரை:
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் – எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.
மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற
கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து. கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது
வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.
கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து. கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது
வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.
பரிமேலழகர் உரை:
ஒருவற்கு – ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண்
கற்ற கல்வி – தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து –
எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து. (வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது
புக்குழிப் புகும் ஆகலின்,
‘எழுமையும் ஏமாப்பு உடைத்து‘ என்றார். எழுமை – மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் –
நன்னெறிக்கண் உய்த்தல்.)