HomeUncategorizedThirukural 403 of 1330 - திருக்குறள் 403 of 1330

Thirukural 403 of 1330 – திருக்குறள் 403 of 1330

Thirukural
403 of 1330 –
திருக்குறள் 403 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்லாமை.
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
Translation:
The
blockheads, too, may men of worth appear,
If
they can keep from speaking where the learned hear!.
Explanation:
The
unlearned also are very excellent men, if they know how to keep silence before
the learned.

கலைஞர் உரை:
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

[ads-post]

மு. உரை:
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால்
ல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
சாலமன் பாப்பையா உரை:
கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.
மணக்குடவர் உரை:
கல்லாதவரும் ஓரிடத்து மிகவும்
நல்லவராவர்
, கற்றவர்
முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின். சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று.
இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.
பரிமேலழகர் உரை:
கல்லாதவரும் நனி நல்லர் –
கல்லாதவரும் மிக நல்லராவர்
,
கற்றார் முன் சொல்லாது இருக்கப்பெறின் – தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண்
ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின். (உம்மை – இழிவுசிறப்பு உம்மை
, தம்மைத்தாம்
அறியாமையின் அது கூடாது என்பார்
, ‘பெறின்என்றும் கூடின் ஆண்டுத்தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை
விரும்புவராகலானும்
நனிநல்லர்என்றும்
கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார்
, அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments