குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்லாமை.
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
Translation:
Like
those who doat on hoyden’s undeveloped charms are they,
those who doat on hoyden’s undeveloped charms are they,
Of
learning void, who eagerly their power of words display.
learning void, who eagerly their power of words display.
Explanation:
The
desire of the unlearned to speak (in an assembly), is like a woman without
breasts desiring (the enjoyment of ) woman-hood.
desire of the unlearned to speak (in an assembly), is like a woman without
breasts desiring (the enjoyment of ) woman-hood.
கலைஞர் உரை:
கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.
[ads-post]
மு.வ உரை:
எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.
மணக்குடவர் உரை:
கல்வியில்லாதான் சொல்லுதற்கு
ஆசைப்படுதல், இரண்டு
முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும். இது தன்னாசையல்லது சொன்னாலும்
விரும்புவாரில்லை யென்றது.
ஆசைப்படுதல், இரண்டு
முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும். இது தன்னாசையல்லது சொன்னாலும்
விரும்புவாரில்லை யென்றது.
பரிமேலழகர் உரை:
கல்லாதான் சொல் காமுறுதல் –
கல்வியில்லாதான் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல், முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று – இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை
அவாவினாற் போலும். (‘இனைத்தென
அறிந்த சினை‘ (தொல்.சொல்.33) ஆகலின், தொகையோடு முற்று
உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதாள் என்பதாம். அவாவியவழிக் கடைப் போகாது, போகினும் நகை
விளைக்கும் என்பதாயிற்று.)