HomeUncategorizedThirukural 657 of 1330 - திருக்குறள் 657 of 1330

Thirukural 657 of 1330 – திருக்குறள் 657 of 1330

Thirukural
657 of 1330 –
திருக்குறள் 657 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்தூய்மை.
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
Translation:
Than store of wealth guilt-laden souls
obtain,
The sorest poverty of perfect soul is
richer gain.
Explanation:
Far more excellent is the extreme poverty
of the wise than wealth obtained by heaping up of sinful deeds.
கலைஞர் உரை:
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

[ads-post]
மு. உரை:
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை:
பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.
மணக்குடவர் உரை:
பழியைச் சுமந் தெய்திய
ஆக்கத்தினும்
, சான்றோர்
மாட்டு உளதாகிய மிக்க நல்குரவே தலைமையுடைத்து
. மேற்கூறியவாறு செய்யின் நல்குரவு உளதாகு மென்றார்க்கு
இது கூறப்பட்டது
.
பரிமேலழகர் உரை:
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின்சாலாதார் தீய
வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின்
; சான்றோர் கழி
நல்குரவே தலை
அதுமேற்
கொள்ளாத சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது
. (நிலையாத
செல்வத்தின் பொருட்டு நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின்
, ‘சான்றோர்
கழிநல்குரவே தலை
என்றார்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments