HomeUncategorizedThirukural 670 of 1330 - திருக்குறள் 670 of 1330

Thirukural 670 of 1330 – திருக்குறள் 670 of 1330

Thirukural
670 of 1330 –
திருக்குறள் 670 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்திட்பம்.
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
Translation:
The world desires not men of every power
possessed,
Who power in act desire not,- crown of all
the rest.

Explanation:
The great will not esteem those who esteem
not firmness of action, whatever other abilities the latter may possess.
கலைஞர் உரை:
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.

[ads-post]
மு. உரை:
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.
மணக்குடவர் உரை:
கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை
பெற்றவிடத்தும் வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார்
. பலபொருளும்
அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது
கூறப்பட்டது
.
பரிமேலழகர் உரை:
வினைத்திட்பம் வேண்டாரைவினைத்திட்பத்தை
இது நமக்குச் சிறந்தது என்று கொள்ளாத அமைச்சரை
; எனைத்திட்பம் எய்தியக்கண்ணும்ஒழிந்த
திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்
; வேண்டாது உலகுநன்கு மதியார் உயர்ந்தோர். (மனத்தின்கண்
திட்பமில்லாதார்க்குப் படை
,
அரண், நட்பு
முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும்
, வினை முடியாதாம், ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பது பற்றிஉலகு வேண்டாதுஎன்றார். இதனான்
வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments