HomeUncategorizedThirukural 671 of 1330 - திருக்குறள் 671 of 1330

Thirukural 671 of 1330 – திருக்குறள் 671 of 1330

Thirukural
671 of 1330 –
திருக்குறள் 671 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைசெயல்வகை.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
Translation:
The Resolve is
counsel’s end, If resolutions halt
In weak delays,
still unfulfilled, ’tis grievous fault.
Explanation:
Consultation
ends in forming a resolution (to act); (but) delay in the execution of that
resolve is an evil.
கலைஞர் உரை:
ஒரு செயலில் .டுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.

[ads-post]
மு. உரை:
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.
மணக்குடவர் உரை:
சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்: அவ்வாறு
துணிந்தவினை நீட்டித்தலின்கண்ணே கிடைக்குமாயின் அது தீதாம்
. இது வினைசெயத்
துணிந்த காலத்து நீட்டிக்குமாயின் அதனை யறிந்து பகைவர் தம்மைக் காப்பார்
: ஆதலால்
நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டுமென்றது
.
பரிமேலழகர் உரை:
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்விசாரத்திற்கு
எல்லையாவது விசாரிக்கின்றான்
இனி இது தப்பாதுஎன்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

அங்ஙனம் துணிவுபெற்ற வினை. பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின் அது குற்றமுடைத்து. (‘சூழ்ச்சி முடிவு
துணிவு எய்தல்
எனவே, துணிவு எய்தும்
அளவும் சூழவேண்டும் என்பது பெற்றாம்
. பின்னர்த்துணிவுஆகு பெயர். நீட்டிப்புசெய்யுங் காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக்
காலக்கழிவாகலானும் பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் தீது என்றார்
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments