Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
நற்றிணை 386 – 390 of 400 பாடல்கள்
386. குறிஞ்சி – தங்கால் ஆத்திரேயன்
செங்கண்ணனார்
செங்கண்ணனார்
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
துறுகட் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி ஞாங்கர்
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்
அணங்குடை அருஞ் சூள் தருகுவென் என நீ
நும்மோர் அன்னோர் துன்னார் இவை என
தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய
வதுவை என்று அவர் வந்த ஞான்றே
– பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு
வாயில் நேர்ந்த தோழி தலைமகளை முகம்புகுவல் என முற்பட்டாள் தலைமகள் மாட்டு நின்ற
பொறாமை நீங்காமை அறிந்து பிறிது ஒன்றன்மேல் வைத்து பாவியேன் இன்று பேதைமை செய்தேன்
எம்பெருமாட்டி குறிப்பு உணர்ந்து வழிபடுவேனாவேன்மன்னோ எனச்சொல்லியது
வாயில் நேர்ந்த தோழி தலைமகளை முகம்புகுவல் என முற்பட்டாள் தலைமகள் மாட்டு நின்ற
பொறாமை நீங்காமை அறிந்து பிறிது ஒன்றன்மேல் வைத்து பாவியேன் இன்று பேதைமை செய்தேன்
எம்பெருமாட்டி குறிப்பு உணர்ந்து வழிபடுவேனாவேன்மன்னோ எனச்சொல்லியது
விளக்கவுரை :
387. பாலை – பொதும்பில் கிழார் மகனார்
நெறி இருங் கதுப்பும் நீண்ட தோளும்
அம்ம நாளும் தொல் நலம் சிதைய
ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக்
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய
துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர்
வருவர் வாழி தோழி செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழு தானைச் செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி உதுக்காண்
நெடும் பெருங் குன்றம் முற்றி
கடும் பெயல் பொழியும் கலி கெழு வானே
– பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி
பருவம் காட்டி வற்புறீஇயது
பருவம் காட்டி வற்புறீஇயது
விளக்கவுரை :
388. நெய்தல் – மதுரை மருதங்கிழார்
மகனார் பெருங்கண்ணனார்
மகனார் பெருங்கண்ணனார்
அம்ம வாழி தோழி நன்னுதற்கு
யாங்கு ஆகின்றுகொல் பசப்பே நோன் புரிக்
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ
நடு நாள் வேட்டம் போகி வைகறைக்
கடல் மீன் தந்து கானற் குவைஇ
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து
தேம் கமழ் தேறல் கிளையடு மாந்தி
பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே
– வரைவு நீட ஆற்றாளாகிய தோழிக்குத்
தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது மனையுள் வேறுபடாது ஆற்றினாய் என்றாற்குத்
தலைமகள் சொல்லியதூஉம் ஆம்
தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது மனையுள் வேறுபடாது ஆற்றினாய் என்றாற்குத்
தலைமகள் சொல்லியதூஉம் ஆம்
விளக்கவுரை :
389. குறிஞ்சி – காவிரிப்
பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
வேங்கையும் புலி ஈன்றன அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்
அன்னையும் அமர்ந்து நோக்கினளே என்னையும்
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென
சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல்
காவல் நீ என்றோளே சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதைச் சுவல் கிளைத்த பூழி மிகப் பல
நன் பொன் இமைக்கும் நாடனொடு
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே
– பகற்குறி வந்து ஒழுகாநின்ற
காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது
காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது
விளக்கவுரை :
390. மருதம் – ஒளவையார்
வாளை வாளின் பிறழ நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்
கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ
விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ
யாணர் ஊரன் காணுநன்ஆயின்
வரையாமைஓ அரிதே வரையின்
வரைபோல் யானை வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள்
அளிய தோழி தொலையுந பலவே
– பாங்கு ஆயின வாயில் கேட்ப
நெருங்கிச் சொல்லியது தலைமகள் தோழிக்கு உரைப் பாளாய் வாயிலாகப் புக்கார் கேட்ப
சொல்லியதூஉம் ஆம்
நெருங்கிச் சொல்லியது தலைமகள் தோழிக்கு உரைப் பாளாய் வாயிலாகப் புக்கார் கேட்ப
சொல்லியதூஉம் ஆம்
விளக்கவுரை :




