Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 12721 - 12750 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 12721 – 12750 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 12721 – 12750 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நல்லாண்டு தேதி நல்லதிவ சம்பார்த்துத்
தெய்வகன்னி மாரைத் தெய்வச்சான் றோரிடமே
மெய்வரம் பான மனுமுறைபோல் தான்பேசிக்
கொடுக்கல்வாங் கல்முறையும் கூறி மிகக்கேட்டுத்
துடுக்கான நல்ல தோகைக்குண மும்பார்த்து
பார்த்துன் னருகில் பணிவிடைகள் செய்யுகின்ற
தோற்றுகின்ற சீசனுடத் தொல்முறை யும்பார்த்து
பதிய முறையும் பாவையர்கள் தம்முறையும்
சதியா யுலகோர் சங்கை யதுபோலே
தங்க நிறமானத் தர்மத் தலைவாநீ
மங்கள மதாக மாலையிடு என்மகனே
என்னோடு கன்னி ஏலமே சொன்னபடி
தன்னோ டினங்கள் தலைவன்மா ரேழ்வரையும்
எடுத்துக் கொடுத்து இளமுலைப்பால் தானூட்டி
கொடுத்து இகனைக் கூறிக்கோ என்மகனே
ஐந்திரண்டு ஆண்டுஅதில் வாழ்ந்திருந்த பின்பு
முந்துமூலப்பதிக்கு முன்மொழிந்த மொழிப்படியே
வந்துநீ சேர்ந்து வகையாக இப்படியே
சாந்தமுடன் வாழ்ந்து தானிருக்கும் வேளையிலே
இப்படியே பெண்கள் இன்னுஞ்சில பேர்களுண்டு
அப்படியே அவரவர்க்கு அந்தந்த வேடமிட்டு
வகைவகையாய் வேசம் மாறி யுருவெடுத்துத்
திகையாம ல்வாக்குச் சொல்லு முறைபோலே
கலியாணக் காட்சி கணக்குத்தீர் வைமுறையும்
வலியானக் கலியில் வாழ்வைமிகக் கொண்டாடிச்
சாம்பசிவக் கோலம் சாருமஞ்ச ணைக்கோலம்
ஆம்பக் குறக்கோலம் ஆடிமிகக் கழித்து
முற்றுந் திருநாள் முழுது மிகநடத்திப்
பத்தும் பெரிய பாலர்தங்கள் வீடேகி
விருந்து மிகவும் விரைவாகத் தானருந்தி

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments