இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 96 – 100 of 130
பாடல்கள்
பாடல்கள்
புல்லாங்குழலூதல்
கண்ணிகள்
96. தொல்லைப்பிறவி தொலைக்கார்க்கு முத்திதான்
இல்லையென் றூதுகுழல் – கோனே
இல்லையென் றூதுகுழல்.
விளக்கவுரை :
97. இந்திர போகங்கள் எய்தினுந் தொல்லையென்
அந்தமா யூதுகுழல் – கோனே
அந்தமா யூதுகுழல்.
விளக்கவுரை :
98. மோன நிலையினில் முத்தியுண் டாமென்றே
கானமா யூதுகுழல் – கோனே
கானமா யூதுகுழல்.
விளக்கவுரை :
99. நாற்போற் பொறிகளை நாநாவிதம் விட்டோர்
பேயரென் றூதுகுழல் – கோனே
பேயரென் றூதுகுழல்.
விளக்கவுரை :
100. ஓடித் திரிவோர்க் குணர்வுகிட் டும்படி
சாடியே யூதுகுழல் – கோனே
சாடியே யூதுகுழல்.
விளக்கவுரை :




