HomeUncategorizedஇடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 86 - 90 of 130 பாடல்கள்

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 86 – 90 of 130 பாடல்கள்


இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 86 – 90 of 130
பாடல்கள்
86. எட்டிரண்ட றிந்தோர்க்கிட ரில்லைகுயிலேமனம்
          ஏகாம னிற்கிற்கதி யெய்துங்குயிலே
நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளுகுயிலேஆதி
          நாயகனை நினைவில்வைத் தோதுகுயிலே.      
விளக்கவுரை :
மயிலொடு கிளத்தல்
87. ஆடுமயி லேநட மாடுமயிலேஎங்கள்
          ஆதியணி சேடனைக்கண் டாடுமயிலே
கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலேஎன்றுங்
          குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே.      
விளக்கவுரை :
88. இல்லறமே யல்லலாமென் றாடுமயிலே பக்தி
          இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே
நல்லறமே துறவறங் காணுமயிலேசுத்த
          நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே.      
விளக்கவுரை :
89. கற்றூணைப் போல்மனதைக் காட்டுமயிலேவரும்
          காலனையுந் தூரத்தி லோட்டுமயிலே
பற்றூ டுருவவே பாயுமயிலே அகப்
          பற்றுச்சறு மிறில்லாமற் பண்ணுமயிலே.
விளக்கவுரை :
அன்னத்தொடு கிளத்தல்
90. சிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தி னிழன்மறையும்
மறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கு மடவனமே.   
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments