HomeUncategorizedஇடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 1 - 5 of 130 பாடல்கள்

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 1 – 5 of 130 பாடல்கள்

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 1 – 5 of 130 பாடல்கள்
காப்பு
கலிவிருத்தம்
ஆதி யந்தமில் லாதவ னாதியைத்
தீது றும்பவந் தீப்படு பஞ்சுபோல்
மோ துறும்படி முப்பொறி யொத்துறக்
காத லாகக் கருத்திற் கருதுவாம்.
விளக்கவுரை :
தாண்டவராயக்கோன் கூறுதல்
கண்ணிகள்
1. எல்லா வுலகமு மெல்லா வுயிர்களும்
          எல்லாப் பொருள்களு மெண்ணரிய
வல்லாள னாதி பரம சிவனது
          சொல்லா லாகுமே கோனாரே.
விளக்கவுரை :
           
2. வானியல் போல வயங்கும் பிரமமே
          சூனிய மென்றறிந் தேத்தாக்கால்
ஊனிய லாவிக் கொருகதி யில்லையென்
          றோர்ந்துகொள் ளுவீர்நீர் கோனாரே.
விளக்கவுரை :
3. முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது
          முத்திக் குறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பத்தியுஞ் சத்தியு முத்தியுஞ்
          சேரா வாகுமே கோனாரே.
விளக்கவுரை :
4. தொல்லைப் பிறவியின் தொந்தமுற் றறவே
          சோம்பலற் றுத்தவஞ் செய்யாக்கால்      
எல்லையில் கடவு ளெய்தும் பதமுமக்கு
          இல்லையென் றெண்ணுவீர் கோனாரே.
விளக்கவுரை :
5. ஆரண மூலத்தை அன்புடனே பர
          மானந்தக் கோலத்தைப் பன்புடனே
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப்
          போதத்தைச் சார்ந்திடு கோனாரே.
விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments