HomeUncategorizedசட்டை முனி சித்தர் பாடல்கள் 21 - 25 of 200 பாடல்கள்

சட்டை முனி சித்தர் பாடல்கள் 21 – 25 of 200 பாடல்கள்


சட்டை முனி சித்தர் பாடல்கள்  21 – 25 of 200 பாடல்கள்
21. தீக்குள்ளே வெந்துநின்ற பற்பம் போலச்
          செகசால முதற்கொண்டு காலம் போகும்;
தீக்குள்ளே விழுந்தெழுந்த நெய்யைப் போலச்
          சிறப்பான ஞானமது திரண்டே யேறும்;
தீக்குள்ளே காட்டமொடு கோலுங் கூடித்
          திரண்டாற்போற் கருவியெல்லாம் கணத்தில் மாளும்;
தீக்குள்ளே பராபரந்தா னிருந்த தாயின்
          செகமெல்லாம் வித்தையென்று தெளிந்து போமே.
விளக்கவுரை :
           
22. தெளிந்தவிடங் கண்டாரார் சித்தர் யோகி
          செகமெல்லாம் நரனென்பார் திருட்டுஞானம்
ஒளிந்துவிட முனைந்ததால்கே சரிக்குள் நிற்பாள்
          உற்றுப்பார் மகாரம்வைத்தே யூகி யூதே
அளிந்தவிடம் நிர்க்குணந்தா னதிலே கேளு;
          ஆச்சரிய மகாரமென்ற யுண்ட துண்டு;   
களிந்தவிடம் நிராகார மொன்று மில்லைக்
          காட்டுந்தா ரறிவுகொண்டே யுற்றுக் காணே.
விளக்கவுரை :
23. உற்றுநின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே
          ஊணுக்குக் கிடையாமல் புரட்டுப் பேசிப்
பற்றுகின்ற மோகத்தாற் பெண்ணைக் கூடிப்
          பரந்துநின்ற திரோதாயி தலையிற் சிக்கிக்
கொத்துகின்ற விடங்காண்பார் கண்ணை மூடிக்
          கும்மென்றே யிருளாகு மறிவும் பொய்யாம்
மற்றுநின்ற லகரியினால் கொண்டே யேற
          மாட்டார்கள் அறுசமய மாடு தானே.
விளக்கவுரை :
24. சமயமெல்லாஞ் சக்தியுண்டு சிவமு முண்டு;
          சண்டாளர் பிரித்தல்லோ தள்ளி னார்கள்;
சமயமெல்லாம் வேதாந்தசித் தாந்த முண்டு
          சாதகத்தைப் பாராமற் றயங்கி னார்கள்;
சமயமெல்லாம் நாதமுண்டு விந்து முண்டு;
          காக்காமற் கொட்டார்க ளுலகத் தோர்கள்;
சமயமெல்லாம் அம்பரமாம் ஞான முண்டு
          தாயைவிட்ட பாவத்தால் தவறிப் போச்சே.
விளக்கவுரை :
25. போச்சப்பா ஆறாறும் பானத் தாலே
          புத்தியுள்ளோர் பானத்தாற் கண்டா ரையா!
ஆச்சப்பா வாமமென்ன நிசித மென்பார்
          அதன் குணமோ திரோதாயி யனுட்டா னந்தான்!
ஓச்சப்பா நாதாக்கள் ரிடிகள் சித்தர்
          உயர்ந்தவரைக் கண்டவர்பா னத்தா லன்றோ?
காய்ச்சமரம் பட்டதென்ன வேரற் றாற்போல்
          கசடரென்ற அறுசமயங் கேட்டே பாங்கே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments