HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 10251 - 10300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10251 – 10300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10251 – 10300 மூலிகைச் சரக்குகள்

பூபவாழைமரம் – பூவன் வாழைமரம்
பூப்பட்டை – இலவங்கப்பட்டை
பூப்பருதிமரம் – பூவரசுமரம்
பூப்புடம் – பூமிப்புடம்
பூமலி – மூளை – மண்டைமூளை
பூமாங்கிச்செடி – சங்கங் குப்பிச்செடி
பூமாரிமரம் – வேப்பமரம்
பூமிச்சருக்கரைக் கிழங்கு – காட்டுச்சருக்கரைக் கிழங்கு
பூமிநாதம் – இந்துப்பூ – பூநீர்
பூமிநாயகச்செடி – நிலவேம்புச்செடி
பூமிநாயகம் – நாக்குப்பூச்சி
பூமிநிம்பச்செடி – நிலவேம்புச்செடி
பூமிபுரண்டி – நிலம்புரண்டிச்செடி
பூமிப்பனை – நிலப்பனை
பூம்பதரைமரம் – பாதிரிமரம்
பூம்பாளை – தென்னம்பூம்பாளை
பூபாரிகமரம் – வேப்பமரம்
பூரகத்திப்பிலி – நறுக்குத்திப்பிலி
பூரகப்புல் – மத்தங்காய்ப்புல்
பூரவாக்கிச்செடி – பூலாஞ்செடி
பூரணிமரம் – இலவமரம்
பூரபதி – பச்சைக்கற்பூரம்
பூரம் – கற்பூரம், பூரபாஷாணம்
பூரிகாமரம் – அகில்மரம்
பூரிதயச்செடி – சிறு தக்காளிச்செடி
பூருண்டிக்கொடி – வேலிப்பருத்திக் கொடி
பூருதுநீறு – பூநீரு, ருதுநீரு
பூலத்திகச்செடி – பூலாஞ்செடி
பூலத்திகிரிச்செடி – பூராஞ்செடி
பூலத்திமரம் – மருதமரம்
பூலாகிக்கொட்டை – பூந்திக்கொட்டை
பூலாங்கிழங்கு – கிச்சிலிக்கிழங்கு
பூலாஞ்சிப்புல் – பூனைப்புல்
பூலாஞ்செடி – வாற்பூலாச்செடி
பூலிகாச்செடி – சுடுதுரத்திச்செடி
பூலிவிதை – வெண்பூலிவிதை
பூவண்டம் – வெங்காயம்
பூவந்திக்கொட்டை – நெய்க்கொட்டான்விரை
பூவந்திப்பழம் – மணிப் புங்குப்பழம்
பூவந்திமரம் – நெய்க்கொட்டான் மரம்
பூவரசமரம் – காய்ப்பூவரசமரம்
பூவழலை – பூநீரு, ருதுநீரு
பூவாதிகாரம் – சீனிக்காரம்
பூவிளம் – கற்பாஷாணம்
பூவைச்செடி – காயாங்குலைச்செடி
பூவோடு பாஷாணம் – தொட்டிப் பாஷாணம்
பூழியசணிக்கொடி – பூசணிக்கொடி
பூழியாசிகச்செடி – சீமையகத்திச் செடி
பூளிகச்செடி – சிறுபூளைச்செடி
பூளைச்செடி – பீளைச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments