HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 10951 - 11000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10951 – 11000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10951 – 11000 மூலிகைச் சரக்குகள்

மதகிரிவேம்பு – மலைவேம்புமரம்
மதகுஞ்சரமரம் – அத்திமரம்
மதபன்னிச்செடி – வட்டத்திருப்பிச்செடி
மதபுட்பிமரம் – ஆத்திமரம்
மதமடக்கி – நீர்விந்துநீர்
மதமடுப்பூடு – வெள்ளைப்பூடு
மதமதப்பூ – மதனகாமப்பூ
மதரிதாச்செடி – அமுக்கிறாச்செடி
மதலிங்கவேம்பு – சிவனார்வேம்புச்செடி
மதலைநீர் – சிறுநீர்
மதலைமரம் – கொன்றைமரம்
மதலைமாசகிமரம் – மாதளைமரம்
மதவடக்கிநீர் – கன்னிநீர்
மதனகாந்திப்பூ – மதனவாரிப்பூச் செடி
மதனகாமப்பூ – மனோரஞ்சிதப்பூ
மதனக்காரைச்செடி – மதுக்காரைச்செடி
மதனலிங்கச்செடி – அமுக்கிராச்செடி
மதாலகமரம் – கொன்றைமரம்
மதி – வெள்ளி, சுத்தக்கட்டி
மதிகயக்கொடி – பரலாந்தெள்ளுக்கொடி
மதிபதிச்சமரிசி – வாலுளுவையரிசி
மதிபதித்தினை – செந்தினை
மதிமயக்கிக்பூண்டு – மனமயக்கிப் பூண்டு
மதிவல்லிக்கொடி – கொத்தான்கொடி
மதிவாமியக்கொடி – சீந்திற்கொடி
மதிவாவிச்செடி – செம்பரத்தஞ்செடி
மது – கள், தேன்
மதுகந்தமரம் – இலுப்பைமரம்
மதுகமரம் – பலாமரம்
மதுகமாதுரம் – அதிமதுரம்
மதுகாதிதமரம் – புன்னைமரம்
மதுக்காரைமரம் – மருக்காரைமரம்
மதுதூதமரம் – மாமரம்
மதுதூதிதக்கள்ளு – பனங்கள்ளு
மதுத்தூருமரம் – இலுப்பைமரம்
மதுநீர்திப்பிலி – நீர்த்திப்பிலி
மதுபருணிகைச்செடி – அவுரிச்செடி
மதுபலமரம் – தென்னைமரம்
மதுபலிதநீர் – நீராகாரநீர்
மதுபன்னிக்கொடி – சீந்திற்கொடி
மதுபானம் – சாராயம்
மதுமலாகம் – பனங்கற்கண்டு
மதுமல்லிகைச்செடி – அடுக்குமல்லிகைச்செடி
மதுரசகாரிச்செடி – பொற்றலைக்கரிப்பான்செடி
மதுரசக்குரும்பை – பெருங்குரும்பை, தென்னங்குரும்பை
மதுரசப்பாலை – கொடிப்பாலை
மதுரசமரம் – முந்திரிமரம்
மதுரபாகசம் – கள்ளு
மதுரபாகமரம் – கமுகுமரம்
மதுரபீகம் – தேங்காய்ப்பூண்டு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments