சித்த வைத்திய அகராதி 11501 – 11550 மூலிகைச் சரக்குகள்
முசலி – தாழை
முசலிகாமரம் – செந்தாழைமரம்
முசற்செவிக்கள்ளி – முயற்செவிக்கள்ளிச்செடி
முசுக்கட்டைமரம் – கம்பளிமரம்
முசுக்கைச்செடி – மொசுமொசுக்கைச் செடி
முசுட்டைக்கொடி – மலைமுசுட்டைச் கொடி
முசுப்பிராமரம் – நரிக்கொன்னை மரம்
முசுமக்கிக்காளான் – மஞ்சட்காளான்
முசுமல்லிகை – காட்டுமல்லிகைக் கொடி
முசுமாலினித்தும்பை – மஞ்சட் காசித்தும்பைச் செடி
முசுமுசுக்கை – மொசுnமொசுக்கை
முசுரக்காளான் – புற்றுக் காளான்
முசுரண்டம் – முசுருமுட்டை
முசுவற்கொடி – முசுட்டைகொடி
முசுறுமுட்டை – செவ்வெரும்பின்முட்டை
முச்சினிமாதம் – மூன்றாமாதம்
முஞ்சிப்புல் – நாணற்புல்
முடக்கத்தான்கொடி – இந்திரவல்லிக்கொடி
முடக்குநாயகச்செடி – சுளுக்குநாயகச்செடி
முடக்குனிச்சின்னி – மஞ்சட்சின்னி
முடக்கொத்தான் – முடக்கத்தான்கொடி
முடங்கசாலிமரம் – காரைமரம்
முடங்கநாறி – பிடங்கநாறிச்செடி
முடங்கலிப்புல் – மத்தங்காய்ப்புல்
முடங்கல்மரம் – தாழைமரம்
முடவாட்டுக்கால்மரம் – ஆட்டுக்கால் மரம்
முடவானங்கைச்செடி – பெரியாணங்கைச்செடி
முடிக்கோரை – உரோமம்
முடித்தும்பைச்செடி – சடைத்தும்பைச் செடி
முடிநீர் – மூளைநீர் , விந்துநீர்
முடிப்புக்கொடி – ஊணாங்கொடி
முடிமாலிகக்கொன்னை – மஞ்சட்கொன்னைமரம்
முடிமேலழகி – கோடகசாலை
முடிமேல்முடிமமரம் – செருந்திமரம்
முடியகந்தச்செடி – சிற்றாமுட்டிச்செடி
முடியுப்பு – கல்லுப்பு
முட்கரணைச்செடி – காட்டுக்கரணைச்செடி
முட்சவிகவிரை – பூனைக்காலிவிரை
முட்கற்றாழை – இலைக்கற்றாழை
முட்காசிகவிரை – குரக்குச்செடி விரை
முட்காவேளை – சுனைவேளைச்செடி
முட்கிளுவைமரம் – முள்ளுக்கிளுவைமரம்
முட்குறண்டி – பூனைமுட் குறண்டிச்செடி
முட்கொடிச்சி – தூதுவளை கொடி
முட்சங்கஞ்செடி – சங்கஞ்செடி
முட்சங்காரிகவிரை – முள்முருங்கைவிரை
முட்சீதாமரம் – சீத்தாமரம்
முட்சீரிதமரம் – கிளுவைமரம்
முட்சுண்டை – பேய்ச்சுண்டை
முட்டிச்செடி – பிராமுட்டிச்செடி




