சித்த வைத்திய அகராதி 11701 – 11750 மூலிகைச் சரக்குகள்
மூதிகாவேம்புச்செடி – சிவனார்வேம்புச்செடி
மூதிதமரம் – எருக்கிலைமரம்
மூதிரக்கொடி – அவரைக்கொடி
மூதிராவிருட்சம் – எருமைவிருட்சம்
மூதைக்காலிச் செடி – இசங்குச்செடி
மூதைவியச்செடி – பெரியாணங்கைச்செடி
மூலகந்தச்செடி – இருவேலிச்செடி
மூலகபமரம் – முருங்கைமரம்
மூலகாச்செடி – முள்ளங்கிச்செடி
மூலக்கரணிப்பாஷாணம் – கற்கடகபாஷாணம்
மூலக்கொடி – சல்லிக்கொடி
மூலவல்லியிலை – வெற்றிலை
மூலவெளிரசம் – மூளை
மூவிக்குடல் – மணிக்குடல்
மூவிருந்தேக்கி – தொப்புள்
மூவிலைக்குருந்து – குருந்தமரம்
மூவிலைப்பயறு – நரிப்பயறு
மூவிலைப்புள்ளடி – சிறுபுள்ளடி
மூவிலைப்புன்னைமரம் – புன்னைமரம்
மூவிலைமின்னிக்கொடி – அவரைக்கொடி
மூவிலைமுன்னை – சிறுமுன்னை
மூவுதவமணிக்கொடி – யானைக்குன்றிமணிச் செடி
மூறுவக் குரும்பை – பெருங்குரும்பை
மூன்றிலைமேனிச்செடி – குப்பைமேனிச்செடி
மூன்றுகூட்டுநெய் – முக்கூட்டுநெய்
மூன்றுப்பு – அகார, உகார, மகார வுப்பு
மெதுமிளகாய்ச் செடி – குடமிளகாய்ச்செடி
மெதுவாசக்கிழங்கு – கொட்டிக்கிழங்கு
மெதுவுசுரைக்கொடி – கும்பச்சுரைக் கொடி
மெத்தப்பிரமி – வாய்நீர்
மெய்யான்சாரி – ஊன்
மெய்யுதகநீர் – சிறுநீர்
மெருகன்கிழங்கு – வெருகன்கிழங்கு
மெருகிக் கற்றாழை – மருட்கற்றாழை
மெலாம்பழம் – மொலாம்பழம்
மெலிகாவிகம் – மருது மேற்புல்லுருவி
மெல்லியகொத்தான்கொடி – முடக்கொத்தான்கொடி
மெல்லியகோசு – முட்டைக்கோசு
மெல்லியசாகிகமரம் – மராமரம்
மெல்லியபூச்செடி – மல்லிகைப்பூச்செடி
மெல்லியல்மரம் – மலைவாழை மரம்
மெல்லிலை – வெற்றிலை
மெழுகாலிகமரம் – மாங்கிளுவைமரம்
மெழுகு – தேன்மெழுகு
மெழுகுதேன் – கொம்புத்தேன்
மெழுகுபீர்க்கு – வெண் பீர்க்குக்கொடி
மெழுகுபூவிகம் – தேன் கூட்டுக்குள்ளிருக்கும் பூச்சிகள்
மெழுகு பேய்ப்பீர்க்குக் கொடி – கசப்புபேய்ப்பீர்க்கு
மெழுகுவல்லிக்கொடி – வட்டவல்லிக்கொடி
மேகக்காய் – கடுக்காய்




