சித்த வைத்திய அகராதி 11751 – 11800 மூலிகைச் சரக்குகள்
மேகசஞ்சாரிச்செடி – மேகநாதமூலி
மேகசஞ்சீவிச்செடி – மேகநாதமூலி
மேகசாரம் – கற்பூரம்
மேகநாதக்கீரை – சிறுகீரை
மேகநாதக்கோரை – உப்பங்கோரை
மேகநாதிக்கொடி – கட்டுக்கொடி
மேகநாதிப்புல் – சுணங்கப்புல்
மேகநிறத்தாமரை – நீலத்தாமரை
மேகமூலி – புல்லாமணக்குரு
மேகயோனிகம் – புகை
மேகராணிக்குருந்துமரம் – மயிடிக்குருந்துமரம்
மேகவண்டமரம் – மயிற்குருந்துமரம்
மேகவரணைச்செடி – அவுரிச்செடி
மேகவருணனைச்செடி – மேகநாதமூலி
மேகவர்ணச்செவ்வந்தி – நீலவர்ணச்செவ்வந்திச் செடி
மேகவிருளி – பித்து
மேசம் – வெள்ளாடு
மேடகச்செடி – ஆட்டுச்செவிக்கள்ளிச் செடி
மேடசிங்கி – புழுக்கொல்லிச்செடி
மேடசிருங்கி – ஆடுதின்னாப்பாளைக் கொடி
மேதகக்கொடி – சவுரிக்கொடி
மேதகவிருட்சம் – கணையெருமை விருட்சம்
மேதகிக்கற்றாழை – மருட்கற்றாழை
மேதாத்தாமரை – கற்றாமரை
மேதாப்புல்லுருவி – மருதுமேற்புல்லுருவி
மேதாவிருட்சம் – கற்பக விருட்சம்
மேதிக்காவிகமரம் – மருதமரம்
மேதைச்செடி – மகாமேதைச்செடி
மேதோகிகமரம் – கருவேல்மரம்
மேந்தியக்கொழுந்து – மரிக்கொழுந்து
மேந்தியம் – வெந்தயம்
மேரக்காலி – பேய்பிசாசு
மேற்காய்நெல்லிச் செடி – மேல்காய்நெல்லிச் செடி
மேற்கோலகிச் செடி – தட்டைப்பயற்றின் கொடி
மேனாட்டுக்கன்னி – பொன்னாங்கண்ணிச்செடி
மேனிநீர் – கங்கைநீர்
மேனியிலைச்செடி – குப்பைமேனிச் செடி
மேனோசகவிருட்சம் – திலகவிருட்சம்
மைக்கரிப்பான் – கருங்கரிப்பான்
மைக்காரிக்கொன்னை – சரக்கொன்னை
மைக்குண்டு மிளகாய் – கருங்குண்டுமிளகாய்
மைக்குருந்து – கருங்குருந்து மரம்
மைச்குரோகிதம் – மிளகு
மைக்குன்றிக்கொடி – கருங்குன்றிமணிக்கொடி
மைக்கொடு வேலி – கருங்கொடிவேலிச் செடி
மைக்கொன்னை – சரக்கொன்னை மரம்
மைசாட்சி – குக்கில்
மைச்சந்த பாஷாணம் – காச்சற்பாஷாணம்
மைச்சீரகம் – கருஞ்சீரகம்
மைச்சீரிடப்பாசி – வேப்பம்பாசி




