சித்த வைத்திய அகராதி 1201 – 1250 மூலிகைச் சரக்குகள்
ஆத்திபோகிதக்கொடி – யானைக்குன்றிமணிக் கொடி
ஆத்திமரம் – காட்டாத்திமரம்
ஆத்திமாங்கிசச்செடி – வெட்கிப்பூச்செடி
ஆத்திமேற்புல்லுருவி – ஆயினிமேற்புல்லுருவி
ஆத்திமைக்காலிமரம் – வெண்கருங்காலிமரம்
ஆத்திரதம் – இஞ்சி
ஆத்தினிக்கிழங்கு – வெருகன்
ஆத்தினிச்சுவடி – யானைக்காற்சுவடிக்கொடி
ஆத்துக்காலிச்செடி – பூனைக்காலி
ஆத்துமகேசரி – நிலக்கடலை
ஆத்துமம் – அரத்தை
ஆத்துமுள்ளிச்செடி – கண்டங்கத்திரிச்செடி
ஆநகமரம் – தேவதாரிமரம்
ஆநந்தமூலி – கஞ்சா
ஆநந்தவாதிதபாஷாணம் – கெளரிபாஷாணம்
ஆநந்தவாதோதகச்செடி – வெண்குப்பைமேனிச்செடி
ஆநந்தவாரதிச்செடி – பேராமுட்டிச்செடி
ஆநீர் – பசுமூத்திரம்
ஆப்பிள்பழம் – சீமைpயலந்தை
ஆப்புராகிக்கொடி – வெண்குண்டுமணிக் கொடி
ஆப்புரிமரம் – எட்டிமரம்
ஆப்புவேணிகக்கொடி – வெண்கண்டங்கத்திரிக்கொடி
ஆப்புளண்டச்செடி – கையாந்தகரைச்செடி
ஆப்புளாகித்தண்டு – வெண்கீரை
ஆமகச்செடி – துவரைச்செடி
ஆமகோகிலக்கொடி- வெண்குன்றி மணிக்கொடி
ஆமடிகநவ்வல்மரம் – வெண்நவ்வல்
ஆமடிகமரம் – காஞ்சரைமரம்
ஆமணக்குச்செடி – முத்தாமணக்கு
ஆமணத்திரம் – கோரோசனை
ஆமரமரம் – எட்டிமரம்
ஆமரம்பழம் – எட்டிக்கனி
ஆமரிகமரம் – நெல்லிமரம்
ஆமருகாக்கொடி – வெண்கொம்பன் பாகற்கொடி
ஆமலகமரம் – நெல்லிமரம்
ஆமலாகரமரம் – வெண்கொய்யா
ஆமற்செடி – விஷமூங்கிற்செடி
ஆமாதிச்செடி – வெண்கொழுஞ்சிச்செடி
ஆமிரகநுரை – கடல்நுரை
ஆமிரகாக்கீரை – வெண்முள்ளி
ஆமிரமரம் – புளிமாமரம்
ஆமிலத்தாதிகச்செடி – வெண்துத்தி
ஆமிலமரம் – புளியமரம்
ஆமிலமாசுத்துவரை – வெண் துவரைச்செடி
ஆமிலம் – புளி
ஆமிலவனிதக்கொடி – புளிப்பிண்டுக்கொடி
ஆம்பலாச்செடி – புளியாரை
ஆம்பலிக்கடலை – வெண்பச்சைக்கடலை
ஆம்பல்காமரம் – நெல்லி
ஆம்பவக்கொடி – வெள்ளிண்டு




