சித்த வைத்திய அகராதி 1251 – 1300 மூலிகைச் சரக்குகள்
ஆம்பற்கொடி – அல்லிக்கொடி
ஆம்பாரிகச்செடி – வெள்ளை வாடா மல்லிகைச்செடி
ஆம்பாரைச்செடி – புளியாரை
ஆம்பிரகக்கொடி – வெண்தூதுவளைக்கொடி
ஆம்பிரமாமரம் – புளிப்புமாமரம்
ஆம்பிரமூலகவேர் – வெட்டிவேர்
ஆம்பிலஞ்செடி – சூரஞ்செடி
ஆம்பிலிக்கனி – புளியம்பழம்
ஆம்புலிச்செடி – காஞ்சொறி
ஆம்புலொசிதமரம் – வெள்ளுகா
ஆம்புவச்செடி – சூரஞ்செடி
ஆயப்பாலை – கொடிப்பாலை
ஆயிரங்காட்சித் தென்னை – அடுக்கிளநீர்த் தென்னை
ஆயிலாகியம் – வெண்மிளகு
ஆயிலியமரம் – உதரகிரிமரம்
ஆயினிமரம் – ஈரப்பலாமரம்
ஆயினிமேற்புல்லுருவி – ஆத்திமேற்புல்லுருவி
ஆய்ச்சாலிகச்செடி – வெண்மிளகாய்ச்செடி
ஆய்ச்சேவகச்செடி – வெள்ளெருக்கஞ்செடி
ஆய்மலர்க்கொடி – தாமரை
ஆய்மாலிகக்காய் – வெள்ளைமுள் முருங்கைமரம்
ஆரக்கமரம் – சந்தனமரம்
ஆரக்கமாதிகக்கொடி – வெள்ளைத்தாமரைக் கொடி
ஆரக்கம் – அரைத்தசந்தனம்
ஆரக்கூவகச்செடி – வெள்ளை நீர்முள்ளிச்செடி
ஆரசகமரம் – அகில்மரம்
ஆரவாலை – கோடகசாலை
ஆரஞ்சாகிக்கொடி – வெள்ளைப்பசளைக்கொடி
ஆரஞ்சிப்பழம் – குடையாரஞ்சி
ஆரத்தமரம் – அத்திமரம்
ஆரத்திராகம் – இஞ்சிக்கிழங்கு
ஆரத்தோதிகச்செடி – வெள்ளையடுக்கலரிச் செடி
ஆரமரம் – கடம்புமரம்
ஆரமாசகச்செடி – வெள்ளையலரி
ஆரமாமிகமரம் – ஆத்திமரம்
ஆரமாயிகச்செடி – வெள்ளைப்புளிச்சற்கீரை
ஆரம் – சந்தனம்
ஆராகசப்பூண்டு – வெள்ளைப்பூண்டு
ஆராகரியமரம் – அரசமரம்
ஆரிதவலரிச்செடி – வெள்ளையலரி
ஆரியகச்செடி – சிறுகுறிஞ்சா
ஆரியகாசக்கொடி – வெள்ளையல்லிக்கொடி
ஆரியவாசியம் – ஓமம்
ஆரியவிசாகிகக்கொடி – வெள்ளையவரைக்கொடி
ஆரியவிடையம் – அதிவிடையம்
ஆரினி – மயானம்
ஆருகதமரம் – நாவல்மரம்
ஆருவம் – தண்ணீர்
ஆரோகமரம் – ஆத்திமரம்
ஆரேசகச்செடி – வெள்ளையாமணக்குச்செடி




