சித்த வைத்திய அகராதி 12601 – 12650 மூலிகைச் சரக்குகள்
விருவிட்டான்கொடி – வெரிவிட்டான்கொடி
விலக்குநாள் – மாதவிடாய்
விலங்கலம் – சதகுப்பை
விலாமிச்சைவேர் – இருவேலிவேர்
விலாரிச்செடி – விலாமிச்சைசெடி
விலுபன்னிக்குரும்பை – உதிர்குரும்பை
விலேபிகக்கொடி – நீர்ச்சுண்டிக்கொடி
வில்லுகாச்சடைச்சி – வாய்க்காற்சடைச்சிச் செடி
வில்லுவமரம் – வில்வமரம்
வில்லோசைநீர் – சுத்தகங்கை
வில்வமரம் – தேவதாமரம்
விவகாதமரம் – செந்தணக்குமரம்
விழலரிசி – வாலானாசி
விழல்மூரிமரம் – பேரிச்சமரம்வ
விழுதரசமரம் – புண்ணியவரசமரம்
விழுதிகாவிரை – ஆலவிரை
விழுதிச்செடி – வீழிச்செடி
விழுதுமரம் – ஆலமரம்
விளகக்கொட்டை – சேங்கொட்டை
விளக்குநீர் – கங்கைநீர்
விளக்கெண்ணெய் – முத்தெண்ணெய்
விளங்கமரம் – வாழைமரம்
விளங்கம் – வாயுவிளங்கம்
விளங்கரத்தை – சிற்றரத்தை
விளத்தாருக்கொடி – அடம்புக்கொடி
விளம்பிவஞ்சிக் கொடி – குறிஞ்சிக்கொடி
விளவுமரம் – விளாமரம்
விளாத்திச்செடி – பீச்சுவிளாத்தி
விளாத்திதாவரிசி – வாற்கோதுமையரிசி
விளாமரம் – பெருவிளாமரம்
விறுமதருமரம் – புன்முருக்குமரம்
விறுமத்தும்பிலா – விஷத்தும்பிலாமரம்
விறுமமூலி – பிரமிச்செடி
விறைப்புசிக்கொடி – கருடன்கொடி
விற்புருதிநாயகச்செடி – அமுக்கிராச்செடி
வினகமரம் – சேங்கொட்டை மரம்
வினைவிகாசச்செடி – குப்பைமேனிச்செடி
வின்னாகரோகணி – கடுகுரோகணி
வீசகாமரம் – வேங்கைமரம்
வீச்சன்னியமரம் – வில்வமரம்
வீச்சன்னியம் – மந்திரம்
வீடிகையிலை – வெற்றிலை
வீடிக்கொடி – வோல்லாக் கொத்தானகொடி
வீட்டுத்தீமரம் – அகத்திமரம்
வீதசாகிவேர் – விலாமிச்சைவேர்
வீதசோகமரம் – அசோகமரம்
பீதபுட்பி – குக்கில்
வீத்துகக்கொடி – வெள்ளரிக்கொடி
வீத்துகிச்செடி – வீழிச்செடி
வீத்துகிதம் – சதகுப்பை




