சித்த வைத்திய அகராதி 12751 – 12800 மூலிகைச் சரக்குகள்
வெண்நவ்வல் – வெண்நாவல்மரம்
வெண்நொச்சி – ஐந்திலைநொச்சிச்செடி
வெண்பசீராக்கிழங்கு – வெந்தோன்றிக்கிழங்கு
வெண்பசலிக்கொடி – சுவேதப்பசலிக்கொடி
வெண்பச்சைக்கட்லை – வெள்ளைப்பச்சக்கடலை
வெண்பாதிரிமரம் – பாதிரிமரம்
வெண்புரசமரம் – வெண்போதமரம்
வெண்புலிவிதை – பூலிவிதை
வெண்மணிச்செடி – நறுவீழிச்செடி
வெண்மாதுளை – வெள்ளைமாதளைச்செடி
வெண்மிளகாய் – வெள்ளைமிளகாய்
வெண்மிளகியரிசி – நெல்லரிசி
வெண்மிளகு – சுவேகமிளகு
வெண்மிளகுதக்காளி – மிளகுதக்காளி
வெண்முளகாய் – சுவேதகாய்
வெண்முள்ளிக்கீரை – முள்ளிக்கீரை
வெதிர்காமரம் – மூங்கில்மரம்
வெதுப்பச்சூரி – நத்தைசூரிவிரை
வெதுப்படக்கி – தலைசுருளிக்கொடி
வெதும்பாச்செடி – வெள்ளைதயாளைச்செடி
வெந்தநெல்லரிசி – புழங்கலரிசி
வெந்தபிகிரி – சுடுபிணம்
வெந்தயச்செடி – விமலோதயச்செடி
வெந்தலமரம் – குங்கிலியமரம்
வெந்தலயம் – வெந்தயம்
வெந்தேக்கிரி – தீயொதல்
வெந்தேக்குமரம் – பின்ளைத்தேக்க
வெந்தேட்கொடுக்குச்செடி – பெருந்தேட்கொடுக்குச்செடி
வெந்தோதிக விரை – அழிஞ்சில்விரை
வெந்தோன்றிகாச் செடி – கண்ணுப்பீழைச்செடி
வெந்தோன்றிக்கிழங்கு – நாவிக்கிழங்கு
வெப்பாலைமரம் – பாலைமரம்
வெம்பிளிக்கைச்செடி – செவ்வெருக்கிலைச்செடி
வெய்யோன் – சூரியன்
வெருகடி – மூன்றுவிரல்கொண்டது
வெருகடுக்கொடி – பூனைக்காலிக்கொடி
வெருகக்கிழங்கு – மெருகன் கிழங்கு
வெருகாமுள்ளி – நீர்முள்ளி விதை
வெருணிச்செடி – பாவட்டைச்செடி, ஆடுதீண்டாப்பாளைச்செடி
வெருவந்தக்கொடி – சௌந்திரியக்கொடி
வெலிகம் – கற்றாழை
வெலிகயக்கீரை – சொக்காக்கீரை
வெல்லம் – கரும்பின்வெல்லம்
வெளிச்சிப்பிசின் – விளாம்பிசின்
வெளித்தாமரை – ஆகாயத் தாமரை
வெளித்துகமரம் – முருக்குமரம்
வெளிநீர் – ஆகாயநீர்
வெளிறுமரம் – நறுவிளிமரம்
வெளுப்பத்தி – எலும்ப
வெள்வெங்காயம் – வெள்ளைவெங்காயம்




