சித்த வைத்திய அகராதி 12701 – 12750 மூலிகைச் சரக்குகள்
வெண்கட்டுக்கொடி – சிறுகட்டுக்கொடி
வெண்கண்டங்கத்திரி – வெள்ளைக்கண்டங்கத்திரிக் கொடி
வெண்கராசிகப்பாலை – வெப்பாலை மரம்
வெண்கருங்காலி மரம் – வெக்காளிமரம்
வெண்கரும்பு – ஆலைக்கரும்புத்தட்டை
வெண்கலிக்கடுகு – வெண்கடுகு
வெண்களற்சிக்கொடி – களற்சிக்கொடி
வெண்களிக்கரும்பு – வெண்கரும்புத்தட்டை
வெண்காக்கட்டான – கரக்கட்டானகொடி
வெண்காக்கியமிளக – வெண்மிளகு
வெண்காந்தல்மலர் – காந்தண்மலர்
வெண்காலிமரம் – வெக்காளிமரம்
வெண்கிலுகிலுப்பைச்செடி – பேய்மிரட்டிச்செடி
வெண்கீரைத்தண்டு – வெள்ளைகீரைத் தண்டு
வெண்குகக் கடலை – வெண்கடலை, சிறுகடலை
வெண்குங்கிலியம் – வெந்தயம்
வெண்குண்டுமணி – வெள்ளைக்குண்டுமணி
வெண்குப்பைமேனி – குப்பைமேனி
வெண்குமுதக்கொடி – வெள்ளாம்பற்கொடி
வெண்கூதாளக்கொடி – தாளிக்கொடி
வெண்கொடிவேலி – கொடிவேலிச்செடி
வெண்கொம்பன்பாகல் – வெள்ளைக்கொம்பன்பாகற்கொடி
வெண்கொம்புப்புடல் – பேய்பபுடற்கொடி
வெண்கொய்யாமரம் – வெள்ளைக்கொய்யாமரம்
வெண்கொறண்டிச்செடி – முட்குறண்டிச்செடி
வெண்கொழுஞ்சி – வெள்ளைக்கொழுஞ்சிச்செடி
வெண்கொள்ளுச்செடி – நரைகொள்ளுச்செடி
வெண்கோடப்பட்டை – அக்காரப் பட்டை
வெண்சலசக்கொடி – வெண்டாமரைக்கொடி
வெண்சாரணை – வெள்ளைச்சாரணைக் கொடி
வெண்சித்தகத்திமரம் – வெண்சம்பைமரம்
வெண்சிவதை – சிவதைவேர்
வெண்சீந்திற்கொடி – அமுதவல்லி
வெண்செவ்வந்தி – வெண் சாமந்திப்பூச் செடி
வெண்டாழைமரம் – தாழைமரம்
வெண்டுமிளகாய் – குண்டுமிளகாய்
வெண்டூகிக்கரும்பு – வெண்கரும்புத்தட்டை
வெண்டைச்செடி – வெண்டிச்செடி
வெண்ணாகம் – வெள்ளீயம்
வெண்ணாங்குமரம் – ஒடைமரம்
வெண்ணாரைமரம் – நாரைமரம்
வெண்ணாவல்மரம் – வெள்ளைநாவல்மரம்
வெண்தினை – தினை
வெண்தீவிரக்கொடி – வெண்காக்கட்டான்கொடி
வெண்துத்தி – பால்துத்திச்செடி
வெண்துருவாதிதம் – வெண்குங்கிலியம்
வெண்துவரை – வெள்ளைத்துவரை
வெண்தூதகிக்கொடி – வெண்சாரணைக்கொடி
வெண்தூதுவளை – வெள்ளைத்தூதுவளைக்கொடி
வெண்தொயிலிக்கீரை – துயிலிக்கீரைச்செடி




