சித்த வைத்திய அகராதி 1301 – 1350 மூலிகைச் சரக்குகள்
ஆரைக்காலிப்புல் – கோரைப்புல்
ஆரைக்கீரை – நீராரைக்கீரை
ஆரைக்குலகக்கொடி – வெள்ளையவரைக்கொடி
ஆரைக்கொடி – வல்லாரைக்கொடி
ஆரைச்சேவிதச்செடி – வெள்ளை எள்ளுச்செடி
ஆரைமாமரம் – அத்திமரம்
ஆரோகக்கீரை – சிறுகீரை
ஆர்க்கங்கிழங்கு – கோடங்கிழங்கு
ஆர்க்கரமரம் – கப்பட்டிமரம்
ஆர்த்தமரம் – ஆத்திமரம்
ஆர்த்தவச்செடி – பெருங்குறுந்தொட்டி
ஆர்த்திகம் – திப்பிலி
ஆர்த்திகோலகச்செடி – வெள்ளை விஷ்ணுகரந்தைச்செடி
ஆர்ப்பதுமம் – அரத்தை
ஆர்ப்போஷிதக்கொடி – வெள்ளை வெற்றிலைக்கொடி
ஆலகமரம் – நெல்லிமரம்
ஆலகமாதிதக்கிழங்கு – வெற்றிலை வள்ளிக்கிழங்கு
ஆலகாலம் – நஞ்சு, பச்சைநாபி
ஆலகாலம்போக்கிச்செடி – நிலவாகை
ஆலகிரிடைச்செடி – அலரி
ஆலங்கட்டி – துருசு
ஆலசியம் – சோம்பு
ஆலமரம் – மால்துயில்மரம்
ஆலமாதிதக்கடலை – வேர்க்கடலை
ஆலமாரிகமரம் – புங்குமரம்
ஆலமுடையோன் – துருசு
ஆலமேதமரம் – மாவுலிங்கமரம்
ஆலம் – துருசு
ஆலம்போக்கிச்செடி – நீலிச்செடி
ஆலவிருட்சம் – மால்துயில்விருட்சம்
ஆலாகதமரம் – வெண்மாதுளை
ஆலாங்கட்டி – கல்மழைக்கட்டி
ஆலாத்தி – சூடன்
ஆலிகாசக்கடலை – பச்சைகடலை
ஆலியகச்செடி – சிறுகுறிஞ்சா
ஆலியகோசவிரை – இஸ்கோல்விரை
ஆலின்மேற்புல்லுருவி – ஆவ்மேற்புல்லுருவி
ஆலின்மைக்கொடி – இடம்புரிக்காய்க் கொடி
ஆலீவ்செடி – சீமைச்செடி
ஆலகாதிச்செடி – இம்புராச்செடி
ஆலூகமரம் – வில்வமரம்
ஆலெசிதமரம் – இரங்கழிஞ்சில்
ஆலைக்கரும்புத்தட்டை – வெண்கரும்புத் தட்டை
ஆலைநிம்பமரம் – சருக்கரைவேம்பு
ஆவதமரம் – குங்குமமரம்
ஆவகாசிதமரம் – இரத்தக் கொய்யாமரம்
ஆவசோனிதமரம் – இரத்தப்புளி
ஆவரைச்செடி – ஆவிரிச்செடி
ஆவரைத்திரவியம் – ஆவரைப்பஞ்சாங்கம்
ஆவரைப்பஞ்சாங்கம் – இலை, பூ, பிஞ்சு, பட்டை, பிசின்




