HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 251 - 300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 251 – 300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 251 – 300 மூலிகைச் சரக்குகள்

அட்டமுகடு – உச்சி           
அட்டி – அதிமதுரம்          
அட்டிகக்காய் – சாதிக்காய்       
அட்டிதாமதம் – சிறுநீரகம்
அட்டிமதுரம் – அதிமதுரம்
அட்டிரமரம் – இலுப்பைமரம்
அட்டிமைச்சீரகம் – கருஞ்சீரகம்
அட்டிரபாணிதம் – சிவப்புப்புளியம் பிரண்டைக்கொடி
அட்டினம் – சீரகம்
அட்டுப்பு – காய்ச்சியவுப்பு
அணிச்சுரச்செடி – நாகமல்லிகை
அணிச்சுராவிதச்செடி – சிவப்புக் கீழ்காய் நெல்லிச்செடி
அணிஞ்சகச்செடி – கொடிவேலி
அணிஞ்சேபக்கொடி – சிவப்புக் குமிட்டிக் கொடி
அணிநுணாமரம் – மஞ்சணத்தி
அணிநோக்கிமரம் – சிவப்புக் கொன்னைமரம்
அணிமூலைக்காய் – பூசணிக்காய்
அணிமுலைப்பால் – பூசணிக் காம்பின்நீர்
அணுக்கமரம் – சந்தனமரம்
அணுக்காபிதமரம் – சிவப்புச் சந்தனமரம்
அண்டகமேனிச்செடி – குப்பை மேனிச்செடி
அண்டகெவுணச்செடி – காட்டுப் பருத்திச்செடி
அண்டக்கோசு – முட்டைக்கோசு
அண்டசம் – முட்டை
அண்டசவ்வு – முடிமாமிசம்
அண்டச்சிறுநீர் – மூத்திரம்
அண்டமுகடு – உச்சிமத்தி
அண்டம் – கோழிமுட்டை
அண்டரசம் – மூளைரசம் , முட்டையின் கரு
அதகக்கொடி – பெருமருந்து
அதபாமிர்தக்கொடி – சிவப்புச் சருக்கரைவள்ளிக் கொடி
அதமரம் – அத்திமரம்
அதம்பம் – கற்பரிபாஷாணம
அதர் – மருந்துக்கசடு         
அதவுநெய் – அத்திப்பிசின்           
அதவுமரம் – அத்திமரம்         
அதளப்பிச்சிச் செடி – சிவப்புச் சீமைப்பிச்சிச்செடி        
அதளமூலிக்கொடி – ஆடுதின்னாப் பாளைக்கொடி       
அதளமேலிச்சாரணை – சிவப்புச் சத்திசாரணைக்கொடி      
அதளைக் கொடி – விதுகங்காய்க் கொடி        
அதாகசச்செடி – சிவப்புச் சிவதை     
அதாசலக்கொடி – காட்டுமல்லிகைக் கொடி       
அதிகண்ணிச்செடி – முன் துடரி             
அதிகத்திக்கொடி – குருக்கத்திக் கொடி          
அதிகநங்கைச் செடி – சிறியாநங்கைச்செடி       
அதிகநாலச்செடி – கொடி வேலி     
அதிகநாலினிக் கொடி – சிவப்புத் தட்டைப்பயிற்றுக்கொடி             
அதிகநாவிச் செடி – வெண் நாவி 
அதிகநேமிச்செடி – சிவப்புச்செவ்வந்திச்செடி             
அதிகமாலிக்கொடி – குருக்கத்திக் கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments